உச்சநீதிமன்றம் வெளுத்தது சாருக்கு கேட்கலையோ? கேரளா ஆளுநர் ஆரிப்கான் என்னவெல்லாம் சொல்றாரு பாருங்க!
திருவனந்தபுரம்: கேரளா மாநில பல்கலைக் கழகங்கள் மசோதா அல்லது நிதி மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் நிறைவேற்றவே முடியாது என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், தமிழ்நாடு மாநில அரசுகள் ஆளுநர்களான பன்வாரிலால் புரோஹித், ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ஆளுநர்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தது.

மசோதாக்களை நிறுத்த முடியாது: தமிழ்நாடு அரசின் வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மாநில ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால் அதே மசோதாவை சட்டசபை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் ஒப்புதல் வழங்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என தெரிவித்தது.
நெருப்புடன் விளையாடும் பஞ்சாப் ஆளுநர்: பஞ்சாப் மாநில அரசின் வழக்கில், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெருப்புடன் விளையாடுகிறார். பஞ்சாப் மாநில அரசு சட்டசபையை கூட்டியது செல்லுமா? செல்லாதா? என்கிற கவலை ஆளுநருக்கு எதற்கு? ஒரு ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் பெயரளவுக்கு நியமிக்கப்படும் ஒரு மாநிலத்தின் தலைவர் அவ்வளவுதான். பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றிய நிதி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத்தான் வேண்டும் என தெரிவித்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்.
கேரளா ஆளுநர் கருத்து: இதேபோல கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தமக்கு எதிரான வழக்கு குறித்து கேரளா ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறியதாவது: கேரளா அரசுக்கும் எனக்கும் எந்த வித மோதலுமே இல்லை. அரசியல் சாசனம் என்ன சொல்கிறதே அதைத்தான் செய்கிறேன். பல்கலைக் கழக மசோதா அல்லது நிதி மசோதா ஆகியவை ஒரு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் நிறைவேற்றவே முடியாது. இவ்வாறு கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications