கோவிஷீல்ட் ஓகே.. ஆனால் கோவாக்சின்?.. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகள் குறித்து ஹைகோரட் கருத்து
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகள் குறித்து கேரள ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது
திருவனந்தபுரம்: கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் வெளிநாட்டுக்கு சுதந்திரமாக போய் வருகிறார்கள்.. ஆனால், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களால் அப்படி வெளிநாடு செல்ல முடிவதில்லை.. சிக்கல் நீடிக்கிறது... இது குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவது போல் இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு அடுத்த ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும்: என்று கேரள ஹைகோர்ட் கருத்து கூறியுள்ளது.
இப்போதைக்கு இந்தியாவில் 2 தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட்..
இவைகளைதான் பெரும்பாலான நாடுகளும் அங்கீகரித்து தங்கள் மக்களுக்கும் செலுத்தி வருகிறது. அதிலும் கோவிஷீல்டை ஏராளமான நாடுகள் அங்கீகரித்துள்ளன..

அனுமதி
கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்டோர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த நாட்டுக்கும் சென்று வருகிறார்கள்.. ஆனால், கோவாக்சின் செலுத்தி கொண்டவர்களால் பல நாடுகளுக்கு போக முடிவதில்லை.. அவர்களுக்கு அனுமதியும் கிடைப்பதில்லை.. இது தொடர்பாக மத்திய அரசும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தாலும் இன்னும் நல்ல பலன் கிட்டவில்லை.

கோவிஷீல்ட்
இந்நிலையில், கேரள ஹைகோர்ட்டில் கிரிகுமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்... அதில், கோவாக்சினை தான் செலுத்தி கொண்டுவிட்ட போதிலும், துபாய் செல்ல அனுமதி கிடைக்கவில்லை என்றும், அதனால் தனக்கு கோவிஷீல்ட் செலுத்த உத்தரவிடக் கோரியும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு இன்று . விசாரணைக்கு வந்தது..
Recommended Video

மத்திய அரசு
அப்போது நீதிபதி சொல்லும்போது, "இந்தியாவில் 2 தடுப்பூசிகள் உள்ளன.. கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் வெளிநாட்டுக்கு சுதந்திரமாக போய் வருகிறார்கள்.. கோவாக்சின் செலுத்தியவர்களால் அப்படி போக முடிவதில்லை.. இது மக்களின் அடிப்படை உரிமையை நசுக்கும் வகையில் உள்ளது.. அதனால், இன்னும் ஒரு மாதத்துக்குள் இதுகுறித்து மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.. அப்படி இல்லாவிட்டால் மனுதாரருக்கு அவரின் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டியிருக்கும்... மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

தடுப்பூசி கொள்கை
இதற்கு அரசு தரப்பில் பதிலளிக்கும்போது, தடுப்பூசிக் கொள்கை திட்டம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.. மறு ஆய்வும் செய்யப்படுகன்றன.. முறையாக ஆய்வு செய்து சான்றளித்த பிறகுதான் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன... தடுப்பூசியில் எந்த தரக்குறைவும் இல்லை.. பக்கவிளைவும் இல்லை.. இதுபோலவே ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications