திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெவ்வேறு கட்சியாக இருந்தாலும்.. கொடியில் பாதி சிவப்புதான்.. கேரளா சிபிஐ மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நாம் வெவ்வேறு கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் திமுக கொடியில் பாதி சிவப்பு நிறம்தான் இருக்கிறது என கேரளாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும், நாம் ஒரே கொள்கையை கொண்டிருப்பதால்தான் தமிழ்நாடு மட்டுமல்ல அகில இந்திய அளவில் கூட்டணியை கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!

 ஆட்சிக் கலைப்பு

ஆட்சிக் கலைப்பு

மாநாட்டில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, "இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் 356ஐ பயன்படுத்தி ஆட்சி கலைப்பு செய்யப்பட்டது கேரளாவில்தான். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த வெறுப்புதான் காரணம். அந்த வகையில் இன்று மாநில சுயாட்சியை வலியுறுத்தி CPI மாநாடு நடத்துகிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு உங்களை விட வேறு யாருக்கும் தகுதியில்லை. ஆனால் அதே வேளையில் இந்த 356வது சட்டத்தை பயன்படுத்தி இரண்டு முறை ஆட்சி கலைப்பு செய்யப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.

சிறப்புரை

சிறப்புரை

வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை என்று கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான இஎம்எஸ் நம்பூதிபாட் கூறியுள்ளார். மாநிலங்களுக்கு அதிகாரங்களை தருவதால் ஒன்றிய அரசு பலவீனப்பட்டுவிடாது என அவர் விரிவாக எழுதியிருக்கிறார். அதேபோல இந்தியாவினுடைய கூட்டாட்சிக்கு வழிகாட்டியவர் கலைஞர் கருணாநிதி. அண்ணாவும் தனது இறுதி கடிதத்தில் வலியுறுத்தியது மாநில சுயாட்சியைதான். இதைதான் அண்ணாவின் உயிலாக நாங்கள் கருதுகிறோம்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 மாநில உரிமை

மாநில உரிமை

மேலும் அண்ணாவினுடைய உரையை மேற்கோள் காட்டிய முதலமைச்சர், ஜிஎஸ்டி, நீட் நுழைவுத்தேர்வு, தேசிய கல்விக்கொள்கை, வேளாண் சட்டங்கள் என மத்திய அரசின் செயல்பாடுகளை குறிப்பிட்டு இதன் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும் ஆளுநர் மூலமாக இரட்டை ஆட்சியை பாஜக நடத்த பார்க்கிறது என்றும், நமது கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக எழுப்பினால் அதற்கான பதில்கள் சொல்லப்படுவதில்லை என்றும் அவர் பாஜக அரசை விமர்சித்து பேசியுள்ளார்.

மந்திர சொற்கள்

மந்திர சொற்கள்

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் ஒற்றைத் தன்மையை வலியுறுத்தும் கொள்கைகளையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். "இந்தியாவை காப்பாற்றுவது என்பது இந்தியாவின் அங்கமாக இருக்கும் மாநிலங்களை காப்பாற்றுவதாகவும். மாநிலங்களை காப்பாற்றுவது என்பது மாநிலங்களின் மொழியை, பண்பாட்டை, உரிமையை, அம்மக்களை காப்பாற்றுவதாகும். இந்தியா பல மதங்கள், மொழிகள், பண்பாடு ஆகியவற்றை கொண்டிருந்தாலும் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க உதவும் மத்திர சொற்கள்தான் கூட்டாட்சி, மாநில சுயாட்சி.

English summary
Even though we belong to a different party, half of the DMK flag is red, the Chief Minister M.K.Stalin has addressed in Kerala. Chief Minister M.K.Stalin, who participated as a special invitee in the 24th State Conference of the Communist Party of India in Thiruvananthapuram, spoke thus. He also said that we have an alliance not only in Tamil Nadu but all India because we have the same policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X