Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 உடல் உறுப்புகள் தானம்.. இறந்தும் 7 பேரை வாழவைக்கும் கேரள சமையல்காரர்..சென்னைக்கு பறந்து வந்த இதயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்த பூமியில் வாழும் சில மனிதர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வகையில் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏழை, எளியவர்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் கொடுத்து புண்ணியம் சேர்த்து வருகின்றனர்.

ஆனால் இவற்றை விட மிகப்பெரிய புண்ணியத்தையும் சிலர் செய்து வருகின்றனர். அது தான் உடல் உறுப்புகள் தானம். ஒருவர் இறந்த பிறகும் அவரது உடல் உறுப்புகள் பலரை வாழச் செய்து வருகிறது. இந்த வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்து ஏழு பேருக்கு புது வாழ்வு அளித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஒருவர். இதனை பற்றி காண்போம்.

வளைகுடா நாட்டில் வேலையை இழந்தார்

வளைகுடா நாட்டில் வேலையை இழந்தார்

கேரள மாநிலம் கிளிகொல்லூரில் உள்ள தொடியில் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வினோத்(54). வளைகுடா நாட்டில் சமையல்காரராக வேலை இழந்த வினோத் கொரோனா காரணமாக வேலையை இழக்க நேரிட்டது. இதனை தொடர்ந்து சொந்த ஊர் வந்து வசித்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. மகள்கள் கீது மற்றும் நீது. வினோத் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

விதி விளையாடியது

விதி விளையாடியது

வேலை பறிபோனதால் ஏழ்மையில் வசித்து வந்த வினோத்தின் குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கடந்த மாதம் டிசம்பர் 2-ம் தேதி அன்று . வினோத் தனது மகள் கீதுவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது விதி விளையாடியது. தனியார் பேருந்தின் பின்புறம் பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தந்தையும், மகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

உடல் உறுப்புகள் தானம்

இதில் மகள் காயத்துடன் சிகிச்சை பெற்று வர, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வினோத் மூளைச்சாவு அடைந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் முழ்கியது. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் வினோத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் அவரால் பலபேர் உயிர் வாழ்வார்கள் என்று டாக்டர்கள் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். வினோத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார்.

 8 உடல் உறுப்புகள் தானம்

8 உடல் உறுப்புகள் தானம்

இதனை தொடர்ந்து வினோத்தின் உடலில் இருந்து 8 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எட்டு உறுப்புகள் எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதயம், இரண்டு, சிறுநீரகம், கைகள், தோள்பட்டை உள்பட 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. வினோத்தின் தோள்பட்டை உள்பட இரு கைகளும் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு தானம் செய்யப்பட்டன.

 சென்னைக்கு பறந்து வந்த இதயம்

சென்னைக்கு பறந்து வந்த இதயம்

திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒரு சிறுநீரகம் வழங்கப்பட்டது. கண்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய கண் மருத்துவ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதேபோல் மற்றொரு சிறுநீரகம் மற்றும் இதயம் சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்தது. இதில் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்றது. கிம்ஸ் மருத்துவமனைக்கு மற்றொரு சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. தான் உயிரிழந்தாலும் தன்னுடைய உடல் உறுப்புகள் மூலம் சுமார் 7 பேரை வாழ வைக்க போகிறார் வினோத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+