Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மம்முட்டி கூடவா? அந்த நடிகையா? லிஸ்ட்டில் வரும் பிரபலங்கள்.. வரிசையாக முன்ஜாமீன்கள்.. #ஹேமா கமிட்டி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் இன்னும் கேரளாவில் அடங்கவில்லை.. இதில் பல பிரபலங்களும் சிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முகேஷ் உள்ளிட்டோர் முன்ஜாமீன்களையும் பெற்று வருகிறார்கள்.

மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் பலபேர் இந்த விவகாரத்தில் சிக்கி வருவதால், தினந்தோறும் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டுள்ளது.. முக்கியமாக, மலையாள சினிமாவில் மோகன்லால் உள்ளிட்ட மிகப்பெரிய ஸ்டார் பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
நடிகைகள்: "அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையானால், நடிக்க சீனே கொடுக்காமல் பெஞ்சில் அமர வைத்து விடுவார்கள். இதுபோல் ஒரு சம்பவம் மம்மூட்டியால், மஞ்சு வாரியருக்கு 20, 22 வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது. அதற்கு பிறகு, மறுநாளிலிருந்து மஞ்சு வாரியர் ஷூட்டிங் வந்தபோது அவருக்கு எந்த ஒரு சீனுமே கொடுக்காமல் பழிவாங்கப்பட்டது" என்றெல்லாம் பத்திரிகையாளர் பரமேஸ்வரன் "பவர்மீடியா" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.

mammootty hema committee mukesh

ஆனால், மம்மூட்டியை பொறுத்தவரை, மிகவும் கண்ணியமானவர்... அமைதியானவர்.. நன்றாக படித்தவர்.. தன்னுடைய மனைவிக்கு பயந்து நடப்பவர் என்றெல்லாம் பலரும் கூறிவரும் நிலையில், பரமேஸ்வரனின் இந்த பேச்சுக்கள் பரபரப்பை தந்துவிட்டது.

மம்முட்டி ட்வீட்: 4 நாட்களுக்கு முன்பு மம்முட்டி பதிவிட்டிருந்த ட்வீட், பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. "இந்த துறையில் தவறானவை ஏதும் நடக்காத வண்ணம் திரைத்துறையினர் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. புகார்களை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, போலீஸார் நேர்மையாக இதனை விசாரிக்கட்டும். தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்" என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்.

அதேசமயம், நடிகை அபிராமி பேட்டியொன்றில் மம்முட்டி பேசும்போது, "நீ எவ்வளவு சம்பாத்தியம் செய்தாலும் யாரையும் நம்பாதே.. என்னதான் அம்மா அப்பாவாக இருந்தாலும் சரி, கூட பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, கணவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் நீ கருத்தாக இருக்க வேண்டும். பணத்தை சரியாக நிரூபிக்கும் பொறுப்பு உனக்கு இருக்க வேண்டும்" என்றெல்லாம் தனக்கு மம்முட்டி அட்வைஸ் செய்ததாக நெகிழ்ந்து கூறியிருப்பதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

mammootty hema committee mukesh

நேற்றுகூட, மலையாள பிரபல நடிகை ஷர்மிளா ஒரு பேட்டியில், "கடை திறப்பு விழாவிற்கு நடிகைகளை கூப்பிடுவார்கள். அதுக்காக இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம் என பேரம் பேசிவிட்டு அழைத்துச்சென்று அங்கு கடை ஓனருடன் தவறான உறவுக்கு வலியுறுத்துவார்கள்.

நடிகை ஷர்மிளா: அதற்கு ஒப்புக் கொண்டால் தாராளமாக பணத்தை வாரி தருவார்கள். இலலாவிட்டால் பேசிய பேமெண்ட்டே கிடைக்காது. சினிமாவிலும் இப்படி 80 சதவீதம் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று நடிகை ஷர்மிளா வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

இதற்கு நடுவில், குஷ்பு, ஊர்வசி, ராதிகா போன்ற முன்னணி சீனியர் நடிகைகளும், தமிழ் சினிமாவிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது என்று சொல்லி, தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டனர்.

புகார்கள்: இப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வரும்நிலையில், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி கொண்டிருக்கிறது. மற்றொருபக்கம், நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்தும் வருகிறது.

அந்தவகையில், டைரக்டர்கள் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேல பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

mammootty hema committee mukesh

முன்ஜாமீன்: இந்த நிலையில் நடிகர் முகேஷ், தன் மீதான புகார்களை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் மறுத்திருந்ததுடன், முன்ஜாமீன் கோரியும் கேரளா ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக முகேஷ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் முகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், இந்த பாலியல் புகார்கள் எதிரொலியால், கேரள அரசின் குழுவில் இருந்து முகேஷ் நீக்கப்பட்டார்.. அதேபோல, எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு ஆலோசித்து அறிவித்துவிட்டது. முகேஷ் போலவே, இடவேல பாபுவும் முன் ஜாமீன் கோரிய நிலையில், அவருக்கும் முன்ஜாமீன் தரப்பட்டுள்ளது.

கடும் தண்டனைகள்: கடந்த காலங்களில்தான் பாலியல் அத்துமீறல்கள் இருந்ததாக இப்போது வந்து நடிகைகள் புகார்கள் சொல்வதும், பலவித விமர்சனங்களை பெற்று வருகிறது.. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனையளிக்கும வலுவான சட்டங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும்போது, அப்போதே ஏன் போலீசுக்கு போகவில்லை? கோர்ட்டுக்கு போகவில்லை? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன

20-க்கும் மேற்பட்டோர் மீது இதுவரை வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான அறிக்கைகளை கேரளா, தெலுங்கானா அரசுகள் முழுமையாக நிறைவேற்றுமா? அல்லது நிராகரிக்குமா? என்பது தெரியவில்ல.. இப்படியொரு பரபரப்புக்கு நடுவில், தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளிலும், ஹேமா கமிட்டி போல் ஒரு கமிட்டி அமைக்க கோரிக்கைகளும் கிளம்பியிருக்கின்றன..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+