உதயநிதி பட நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்.. டாட்டூ போட சென்றபோது ரசிகர் செய்த செயல்! ஷாக்
திருவனந்தபுரம்: உதயநிதி ஸ்டாலினுடன் நிமிர் படத்தில் நடித்த நடிகை நமிதா பிரமோத்திடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். டாட்டூ போடப் போவதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டுவிட்டு, ஸ்டூடியோவுக்கு சென்றபோது டாட்டூ போடவேண்டாம் என்று கூறி ரசிகர் ஒருவர் நடிகையை தொட்டு அத்துமீறியுள்ளார்.
டாட்டூ போடப்போவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதோடு, அந்த கடை மற்றும் தேதியையும் குறிப்பிட்டு இருந்ததால், நடிகையை பின் தொடந்து டாட்டூ போட வேண்டாம் என சொல்லி ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த இளைஞர்.

உதயநிதி ஸ்டாலின் பட நடிகை
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நமிதா பிரமோத். கேரளாவில் டிராபிக் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மலையாளத்தில் படங்களில் நடித்தார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக என் காதல் புதிது, உதயநிதி ஸ்டாலினுடன் நிமிர், அவர் பெயர் ரஜினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரளம் மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர், மலையாள திரைப் படங்கள் மட்டுமின்றி, ஏராளமான தொலைக் காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் பிரபலமான நடிகை என்பதால் இவரை சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். குறிப்பாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பலரும் பின் தொடர்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு
நடிகை நமிதா பிரமோத்தும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை நமிதா பிரமோத், "டாட்டூ" போட்டுக்கொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டார். அப்போது அந்த "டாட்டூ" போடப்போகும் ஊர், நேரம், நாள் உள்ளிட்டவற்றையும் பதிவிட்டு இருந்தார். அதோடு அவர் கூறிய அதே தேதியில் சம்பந்தப்பட்ட ஊருக்கு சென்று டாட்டூ போடுவதற்காக ஸ்டூடியோ சென்று இருக்கிறார்.
இதனை கவனித்த இளைஞர் ஒருவர் நடிகையிடம் நெருங்கி சென்றார். அவரை பார்த்து, நான் உங்கள் ரசிகர்.. நீங்கள் டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது.. என்றுசொல்லியிருக்கிறார். ஆனால் நடிகை அதை கண்டுகொள்ளாமல் சென்று இருக்கிறார். அப்போது அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது நடிகை, "டாட்டூ" போட்டுக்கொள்வது தனது தனிப்பட்ட விஷயம் என சொல்லிவிட்டு வேகமாக நடக்க தொடங்கினார்.
நடிகையை தொட்டு அத்துமீறிய இளைஞர்
ஆனால் அந்த இளைஞர் நடிகையை செல்ல விடாமல் தடுத்து இருக்கிறார். மேலும் நடிகை தொட்டு அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்த நடிகை பாலாரி வட்டம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "டாட்டூ" போடுவதற்காக சென்ற தன்னை, வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தியதோடு, தன்னை மிரட்டியதாகவும், தவறான முறையில் தொட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகை சொன்ன இடத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் அவரது பெயர் விபின் என்பதும், எர்ணாகுளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. நடிகையிடமும் நீங்கள் பிரபலம் என்பதால் தனிப்பட்ட விஷயத்தினை வெளிப்படையாக பதிவிட வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இளைஞர் விபினை போலீசார் கைது செய்தனர். நடிகையை தொட்டு அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications