கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்.. மீட்பு பணி தீவிரம்
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பைபோர் மற்றும் அழிக்கல் இடையே கப்பல் சென்று கொண்டிருந்த போது, கப்பலில் தீ பிடித்துள்ளது. சிங்கப்பூர் கொடி கட்டி வந்த கப்பல் சீனாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் என்று சொல்லப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நவசேவாவுக்குச் சென்று கொண்டிருந்த MV Wan Hai 503 - என்ற கப்பல் கொச்சிக்கு 315 கி.மீ தொலைவிலும், பேப்பூருக்கு சுமார் 70 கடல் மைல் தொலைவிலும் இருந்தபோது தீ பிடித்துள்ளது. கப்பலின் கீழ்தளத்தில் காலை 10:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கப்பலில் தீ விபத்து
270 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல், ஜூன் 7-ம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்டது. ஜூன் 10-ம் தேதி மும்பை துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களில் இரண்டு தைவானியர்கள், ஒரு மியான்மர் நாட்டவர் மற்றும் ஒரு இந்தோனேசியர் ஆகியோர் அடங்குவார்கள் எனத் தெரிகிறது.
கடலோர காவல்படையினர் கப்பலில் இருந்து படகுகளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் 18 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். கப்பலில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. மேலும், கப்பல் கட்டுப்பாட்டை இழந்து திசை தெரியாமல் சென்று கொண்டிருப்பதாக கடைசியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள்
இதையடுத்து, கொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். சூரத் கப்பலை இந்திய கடற்படை உடனடியாக உதவிக்காக அனுப்பியது. விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க ஐ.என்.எஸ். கருடாவில் இருந்து டோர்னியர் விமானம் மூலம் சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மங்களூருக்கு அருகில் இருந்து ஐ.சி.ஜி.எஸ். ராஜ்தூத், கொச்சிக்கு அருகில் இருந்து ஐ.சி.ஜி.எஸ். அன்வேஷ் மற்றும் அகட்டியில் இருந்து ஐ.சி.ஜி.எஸ். சசேத் உள்ளிட்ட பல கப்பல்களை இந்திய கடலோர காவல்படை ஈடுபடுத்தியுள்ளது. பணியில் இருந்த சி.ஜி. டோர்னியர் விமானமும் மீட்புப் பணிகளுக்காக திருப்பி விடப்பட்டது.
கப்பல் கவிழ்ந்து விபத்து
கடந்த மாதம், கேரளாவின் திருவனந்தபுரம் விழிஞம் துறைமுகத்தில் இருந்து லைபீரியா நாட்டுக் கப்பல் ஒன்று அரபிக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.
கடலில் மூழ்கிய கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்கள் இருந்தன. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டன.
இவை கடலில் மூழ்கியதால், கேரள சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. கேரள அரசு இதை மாநில அளவிலான பேரிடராக அறிவித்தது. அரபிக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் சில பொருட்கள் கன்னியாகுமரி கடற்கரையிலும் ஒதுங்கியது.
இன்று கூட தனுஷ்கொடி, அரிச்சல் முனை பகுதிகளில் பிளாஸ்டிக் மூட்டைகள் பல கரை ஒதுங்கின.கேரளவில் அரபிக்கடலில் நடைபெற்ற விபத்து சம்பவம் நடைபெற்ற ஒரு சில வாரங்களில் மீண்டும் ஒரு கப்பல் விபத்து நடைபெற்றுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலை அடைய வைத்துள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications