சபரிமலை பொன்னம்பலமேட்டில் தடையை மீறி சிறப்பு பூஜை.. பக்தர்கள் அதிர்ச்சி.! ஒருவர் மீது வழக்குப்பதிவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் தடையை மீறி பொன்னம்பலமேட்டிற்கு சென்று சிலர் சிறப்புப் பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் குவிந்தே இருப்பார்கள். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க உலகெங்கும் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
இடையில் கொரோனா காலத்தைத் தவிர சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் கார்த்திகை மாதம் என்றால் நாடு முழுக்க இருக்கும் பக்தர்கள் அங்கே செல்வது வழக்கம்.

சபரிமலை ஐயப்பன்: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனை தரிசி உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் குவிந்தே இருப்பார்கள். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க உலகெங்கும் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.ப்பார்கள். குறிப்பாகத் தமிழ்நாடு ஆந்திராவில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் அங்கே செல்வார்கள்.
அங்கே சபரிமலை ஐயப்பன் கோயிலைச் சுற்றி வனப்பகுதியே இருக்கிறது. அந்த வனப்பகுதிக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையில் முக்கிய மூலஸ்தானமாக கருதப்படும் பொன்னம்பலமேடு பகுதிக்கு யாரும் செல்ல அனுமதி இல்லை.
பொன்னம்பலமேடு: பந்தல ராஜாவின் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு சாத்தி வழிபடும் போது, பொன்னம்பலமேடில் ஜோதியாக அவர் காட்சி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே பொன்னம்பலமேட்டிற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. கோயில் பூசாரிகள் சிலரைத் தவிர அங்கே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும், வன விலங்கு நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறையும் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், தடையை மீறி சிலர் பொன்னம்பலமேடு பகுதியில் ஜோதி தெரியும் இடத்திற்கு சென்றுள்ளனர். சட்டவிரோதமாக அங்கே சென்ற 5 பேர் விசேஷ பூஜைகளைச் செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இதனிடையே கோயில் மரபுகளை மீறி அத்துமீறி அங்கே சென்று விஷேச பூஜை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
கடும் நடவடிக்கை: அதன்படி, பொன்னம்பலமேட்டில் சட்டவிரோதமாக நுழைந்ததாக நாராயணன் மீது வனத்துறை ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.

இணையத்தில் பரவும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகச் சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில் பேசும் நபர் தமிழில் பேசிய நிலையில், அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications