Fox Attack in Kerala: வீட்டு திண்ணையில் நடந்த வேட்டை முயற்சி.. பள்ளி சிறுவனை பதம் பார்த்த நரி! ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த சிறுவனை நரி ஒன்று கடித்து குதற முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
கண்ணூர் மாவட்டம் மாட்டூல் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று மாலை வீட்டு அருகே சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நாய் போன்ற ஒரு உருவம் அலைந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் நாய்கள் சைஸில் சிறியவையாக இருக்கும். இது கொஞ்சம் பெரிதாகவும், வால் முடி அடர்த்தியானதாகவும் இருந்திருக்கிறது. அந்த உருவம் தங்களை நெருங்கி வரவே, வருவது நரி என சிறுவர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.

ஆனால் நரி அவர்களை விடாமல் துரத்தி வந்திருக்கிறது. சிறுவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று விடவே, திண்ணையில் அமர்ந்திருந்த சிறுவனை நரி நோட்டம் விட்டிருக்கிறது. சிறுவன் அலர்ட் ஆவதற்குள் சட்டென சிறுவனின் காலை கடித்து இழுத்திருக்கிறது. சிறுவன் கூச்சலிடவே, சிறுவனின் தாய் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அடித்து நரியை விரட்ட முயன்றிருக்கிறார். ஆனால் நரி பிடியை தளர்த்தவில்லை. சிறுவனின் தாயும் விடாமல் தாக்கவே, நரி வேறு வழியின்றி விட்டுவிட்டு ஓடியிருக்கிறது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகின்றன. தமிழ்நாட்டில் எப்படி நாய்க்கடி குறித்த அச்சம் இருக்கிறதோ, அதேபோல கேரளாவில் நரிக்கடி குறித்து அச்சம் இருக்கிறது. நேற்று நடந்த சம்பவம் அரிதானது அல்ல. இதுபோல இயல்பாக பல சம்பவங்கள் நடக்கின்றன. சமீப நாட்களாக மாட்டூல் மற்றும் சேலேரி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் நரி கடித்து 6 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேர் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு வயதானவர் கண்ணில் காயம் அடைந்ததால், அவர் பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நரி கடியால் ரத்த காயம் ஏற்படுவதை தாண்டி மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. அதாவது நரி கடிப்பதன் மூலம் ரேபிஸ் நோய் பரவும். ரேபிஸ் உயிர்கொல்லி நோயாகும். கேரளாவில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் ரேபிஸ் அச்சம் குறைவு. ஆனால் நரிகளை பிடித்து இப்படி தடுப்பூசி போட முடியாது. ஏனெனில் அவை பெரும்பாலான நேரங்களில் காட்டுக்குள் மறைந்திருக்கும். வேட்டையாடும் போது மட்டும் ஊருக்குள் வரும். அதுவும் ஊருக்குள் வருவது எப்போதாவதுதான். வந்தாலும் அதை பிடிக்க முடியாது. எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications