யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கக் கூடாது..அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு போட்ட கேரளா..எதற்காக தெரியுமா?
கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கக்கூடாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்கள் தொடங்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. யூடியூப் சேனல் தொடங்க அனுமதி கோரி தீயணைப்பு படை வீரர் ஒருவர் கேரள அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் இணையத்தில் கொடி கட்டி பறக்கிறது.
ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் யார் வேண்டும் என்றாலும் இப்போது யூடியூப் சேனல்களை ஆரம்பித்து விடலாம்.

யூடியூப் வீடியோ
யூடியூப்களில் போடப்படும் வீடியோக்களின் பார்வைக்கு ஏற்ப வீடியோ பதிவேற்றம் செய்யும் கிரியேட்டர்களுக்கு கணிசமான தொகையையும் யூடியூப் கொடுக்கிறது. இதனால், யூடியூப் சேனல்கள் ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்தியாவில் புதிதாக யூடியூப் சேனல்கள் ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்க கால கட்டத்தில் பலரும் யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து, சுற்றுலா, சமையல் என தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பற்றி பதிவிட்டு லாபமும் பெற தொடங்கினர்.

யூடியூப் சேனல் தொடங்க அனுமதி கோரி
நல்ல வேலையில் நல்ல ஊதியம் பெற்று வருபவர்கள் கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் யூடியூப்களில் வீடியோக்கள் போடுகின்றனர். யூடியூப் சேனல்கள் ஆரம்பிப்பதற்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் யார் வேண்டும் என்றாலும் ஆரம்பித்து விடலாம் என்ற நிலைதான் உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்கள் தொடங்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. யூடியூப் சேனல் தொடங்க அனுமதி கோரி தீ அணைப்பு படை வீரர் ஒருவர் கேரள அரசிடம் அனுமதி கோரியிருந்தார்.

அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு
இந்த கோரிக்கையை நிராகரித்த அம்மாநில அரசு, அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்கள் தொடங்கி வருவாய் ஈட்டுவது நிதி ஆதாயம் பெறும் செயல் என்பதால் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கேரள அரசு அனுமதியை மறுத்துள்ளது. அதேவேளையில் மாநில அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள அரசின் தொழிலாளர் மற்றும் திறன் துறையின் இணை செயலாளர் ஆர்.எஸ் ருசைய் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
அதில் சமூக வலைத்தளங்கள் இணையதளங்கள் அரசு ஊழியர்கள் பயன்படுத்துவதற்கு அவர்களின் தனிநபர் சுதந்திரம் அனுமதி அளிக்கிறது. ஆனாலும் யூடியூப் போன்ற வருமானம் கொடுக்கும் தளங்களில் அதிக அளவு சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கவோ நிதி ஆதாயம் பெறவோ அனுமதி கிடையாது. இதை பின்பற்றாவிடில் கேரள அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் மீறலாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யூடியூப் சேனல்கள் வைத்திருந்தாலும் அதை கிளோஸ் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications