திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவை உலுக்கும் மழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. தற்போது நிலை என்ன? முழு விபரம்!

கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kerala Rains | பொத்துக்கிட்டு ஊற்றும் மழை.. மூணாறு கடும் வெள்ளப்பெருக்கு- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நான்கு மாவட்டங்களுக்கு இதனால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    மும்பை, கேரளா, புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கேரளாவும், மும்பையும்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    ரெட் அலெர்ட்

    ரெட் அலெர்ட்

    கேரளாவில் தொடர் மழை போக போக அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் கேரளாவில் வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    அணை எப்படி

    அணை எப்படி

    மழை காரணமாக முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. 116 அடியில் இருந்து 123 அடியாக முல்லை பெரியாறு அணை நீர் மட்டும் உயர்ந்து இருக்கிறது. ஒரே இரவில் 7 அடி முல்லைப்பெரியாறு அணை உயர்ந்துள்ளது. கேரளாவில் இடுக்கியில் உள்ள சிறு சிறு அணைகள், மற்றும் வயநாட்டில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    வயநாடு பாதிப்பு

    வயநாடு பாதிப்பு

    இந்த மழை காரணமாக வயநாடு மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் சாலைகளில் நீர் நிரம்பி ஓடிக்கொண்டு இருக்கிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    மக்கள் வெளியேற்றம்

    மக்கள் வெளியேற்றம்

    இந்த மழை காரணமாக மொத்தம் 315 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 25000 மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக மழையால் அதிகம் பாதித்த வயநாடு பகுதியை சேர்ந்த மக்கள்தான் அதிகமாக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    போக்குவரத்து இல்லை

    போக்குவரத்து இல்லை

    தற்போது கொச்சியில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 5 மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக வயநாடு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளிகள் விடுமுறை

    பள்ளிகள் விடுமுறை

    அதேபோல் மழை காரணமாக கேரளா முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கேரளாவில் 10 மாவட்டங்களில் மழை காரணமாக கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    இந்த மழையால் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 40 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தற்போது வயநாட்டில் தீவிரமாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    English summary
    Heavy rain lashed Kerala, Red alert issued -All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X