Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஆன்லைன் க்யூ டோக்கன்.. முன் பதிவு செய்வது எப்படி? எளிய விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக ஆன்லைன் க்யூ முறை மூலம் டோக்கன் முன் பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஆன்லைன் க்யூ டோக்கன்.. முன் பதிவு செய்வது எப்படி? - வீடியோ

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 16ம் தேதியில் இருந்து இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். தினமும் 30 ஆயிரம் பேர் வரை இங்கு தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஆன்லைன் மூலம் இங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. கொரோனாவை மனதில் வைத்து இந்த ஆன்லைன் அனுமதி அவசியமாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசனம் மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    How to book in Sabarimala Virtual-Q Booking Slot? All you need to know

    இதனால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதி வரும் நிலையில் இது கொரோனா பரவலை ஏற்படுத்தாமல் இருக்கும் வண்ணம் இந்த ஆன்லைன் க்யூ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் இன்றி எளிதாக தரிசனம் செய்யவும், பிரசாதம் வாங்கவும் வசதியாக தேதி, நேரம் வாரியாக ஆன்லைன் க்யூ உருவாக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக மழை காரணமாக கூட்டம் குறைந்த நிலையில் மீண்டும் அங்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்து இருக்கும் ஆன்லைன் க்யூ முறையில் முன்பதிவு செய்து சாமி வழிபாட்டிற்கான டோக்கனை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

    பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாட்டிற்கான ஆன்லைன் க்யூ டோக்கனை எளிதாக பெற முடியும்.

    படி 1 - https://sabarimalaonline.org/#/login என்ற சபரிமலை கோவிலின் அதிகாரபூர்வ அரசு பக்கத்திற்கு செல்லுங்கள்.

    படி 2 - இந்த பக்கத்தில் சைன் அப் செய்ய வேண்டும். இதில் உங்களின் பெயர், போன், போட்டோ, மெயில் ஐடி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இந்த விவரங்களை இதில் பதிவேற்றி உங்களின் கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஓடிபி பரிசோதனை செய்யப்படும். பின் நீங்கள் பதிவு செய்த அந்த மெயில் ஐடி, பாஸ்வேர்டை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பக்கத்தில் லாக் இன் செய்ய முடியும். இதுதான் கணக்கில் உள்ளே செல்லும் முறை.

    படி 3 - லாக் இன் செய்து உள்ளே நுழைந்ததும், அதில் மேல் பக்கத்தில் Virtual Q (விர்ச்சுவல் க்யூ) என்ற பகுதி இருக்கும். இதில்தான் நீங்கள் தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கனை பெற வேண்டும். இதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதில் நீங்கள் தனிப்பட்ட வகையில் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ, அல்லது குழுவாகவோ செல்ல டோக்கன் பெற முடியும்.

    படி 4 - தனி டிக்கெட்டா, குழு டிக்கெட்டா என்பதை தேர்வு செய்துவிட்டு Add pilgrim ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு பக்தரின் பெயர், போட்டோ, ஐடி கார்ட், தொலைபேசி எண், விலாசம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். போட்டோவை அப்லோட் செய்த பின் ஓகே கொடுக்க வேண்டும். எத்தனை பேர் செல்கிறீர்களோ எல்லோருக்கும் இந்த விவரங்களை கொடுக்க வேண்டும்.

    படி 5 - இதன் பின் அடுத்த பக்கத்தில் தேதி, நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இதில் எந்த தேதியில் தரிசனம் செய்ய முடியுமோ அந்த தேதி, நேரம் மட்டுமே காட்டும். அந்த தேதிகளை முன் கூட்டியே புக் செய்ய வேண்டும். இந்த தேதிகளை தேர்வு செய்து விஷ் லிஸ்டில் சேர்க்க வேண்டும்.

    படி 6 - அதே பக்கத்தில் தேவசம் போர்ட் வழங்கும் பிரசாதம்களை முன் கூட்டியே புக் செய்து கொள்ளலாம். இதற்கான பணத்தையும் ஆன்லைன் மூலம் நீங்கள் செலுத்த முடியும். இதற்கு பின் விஷ் லிஸ்ட் பகுதியை கிளிக் செய்தால் உங்களின் ஆன்லைன் Virtual Q கூப்பன் உருவாகும். க்யூ ஆர் கோடோடு இந்த இருக்கும் இந்த டோக்கனை பயன்படுத்தி நீங்கள் சபரிமலை கோவிலுக்கு குறிப்பிட்ட தேதியில் தரிசனம் செய்ய செல்லலாம்.

    படி 6 - நீங்கள் Virtual Q டோக்கன் புக் செய்த விவரம் உங்கள் போன் எண்ணுக்கும் வரும். சபரிமலை பக்கத்தின் my profileல் இருக்கும் கூப்பனையும் நீங்கள் பிரிண்ட் செய்து கொள்ள முடியும்.

    இந்த விவரங்களை செய்தியில் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோ மூலம் இன்னும் எளிதாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

    ஆன்லைன் டோக்கன் வசதியை பயன்படுத்தி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+