சிந்து நதியில் ரத்த ஆறு ஓடுமா? அப்போ அது பாகிஸ்தானியர்களின் ரத்தமாக தான் இருக்கும் - சசிதரூர்
திருவனந்தபுரம்: சிந்து நதியில் தண்ணீர் ஓடாவிட்டால் இந்தியர்களின் ரத்தம் தான் ஓடும் என்று பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ திமிராக பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். ‛‛ரத்த ஆறு பாயப் போகிறது என்றால், அது நம்முடையதை விட அவர்களின் பக்கம் தான் அதிகமாக பாயும்'' என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் கடந்த 22ம் தேதி 26 சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது.

முதற்கட்டமாக சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சிந்து நதி நீர் தான் பாகிஸ்தானுக்கு உயிர் நாடியாக உள்ளது. பாகிஸ்தான் மக்களின் 21 கோடி பேர் தங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு சிந்து நதி நீரை நம்பித்தான் உள்ளனர். பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீரை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி திமிராக பேசியிருந்தார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‛‛இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். சிந்து நதி எங்களுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும். ஒன்று நமது தண்ணீர் அந்த நதியில் பாயும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும்'' என்று வாய்ச்சவடாலாக கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இன்று சசிதரூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சிந்து நதியில் தண்ணீர் ஓட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியர்களின் ரத்தம் தான் பாயும் என்று பிலாவால் பூட்டோ கூறியிருப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சசிதரூர், ‛‛இது எரிச்சலூட்டும் வகையிலான பேச்சு.
குற்றங்கள் ஏதும் செய்யாமல் இந்தியர்களை கொல்ல முடியாது என்பதை புரிந்து கொல்ல முடியும். பாகிஸ்தானியர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால் அதற்கான பதிலடியை தாங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். ரத்த ஆறு பாயும் என்றால் உண்மையில் அவர்களின் ரத்தம் தான் அதிகமாக பாயும்'' என்று சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய சசிதரூர் எம்பி பாகிஸ்தானை கடுமையாக விளாசினார். இதுபற்றி அவர், ‛‛நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்காக பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி உள்பட பல பயிற்சிகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
குறிப்பாக பயங்கரவாத தாக்குதலை நடத்திய அமைப்பு பொறுப்பேற்றாலும் கூட பாகிஸ்தான் மறுக்கிறது. உரி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இப்போது மீண்டும் அதனை விட பெரிய தாக்குதலை பார்க்க போகிறேன் என்று நினைக்கிறேன்.
நம் நாடு அதனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து நிற்கிறது. ஆனால் இது எப்போது, எப்படி, எங்கே நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக நடக்கும் என்று நம்புகிறேன்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications