Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் 2வது பெண்.. 1991க்கு பிறகு தூக்கில் போடப்படும் கேரளாவை சேர்ந்த முதல் குற்றவாளி கிரீஷ்மா!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதலன் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு நேற்று கேரளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதன்மூலம் கேரளாவில் 1991ம் ஆண்டுக்கு பிறகு 34 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரீஷ்மா தூக்கில் போடப்பட உள்ளார். அதோடு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் மரண தண்டனை பெற்ற 2வது பெண்ணாக அவர் இருப்பார்.

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (25). இவர் குமரி மாவட்டம், நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்தார்.

sharon raj greeshma kerala

வீட்டில் பணக்கார மாப்பிள்ளை பார்த்தால் கிரீஷ்மா, ஷாரோன் ராஜுக்கு கசாயம் என்று கூறி ஜுஸில் ஸ்லோ பாய்சன் விஷம் கலந்து கொடுத்து கொன்றார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷாரோன் ராஜ் வயிற்று வலிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோருக்கு நேற்று கேரளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்து வந்த நெய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. இந்த தண்டனையை கேட்டதும் கிரீஷ்மாக நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் வடித்தார். விரைவில் கிரீஷ்மாவுக்கு கேரளாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

sharon raj greeshma kerala

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளாவில் 1991ம் ஆண்டுக்கு பிறகு 34 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை என்பது நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுவாக நம் நாட்டில் பெரும்பாலான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படும். மிகவும் கொடூரமான கொலை குற்றத்துக்கு மட்டுமே தூக்கு தண்டனை என்பது வழங்கப்படும்.

அந்த வகையில் நம்நாட்டையே உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் தான் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை கடைசியாக கடந்த 1991ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது தூக்கில் போடப்பட்டவரின் பெயர் முத்துகுட்டி சந்திரன் என்ற ரிப்பர் சந்திரன். இவர் யார் என்றால் சீரியல் கில்லர். கண்ணூர் மத்திய சிறையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த சமயத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தூக்குப்போடுவதில் எக்ஸ்பர்ட்டாக இருக்கும் யாரும் கிடைக்கவில்லை. இதனால் சிறை சூப்பிரண்ட்டாக இருந்த என்பி கருணாநகர் தான் ரிப்பர் சந்திரனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினார்.

1991ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிப்பர் சந்திரனின் சொந்த ஊர் நீலிஸ்வரம் அருகே உள்ள கரின்தலம். இவர் கடந்த 1980 - 1985 இடைப்பட்ட காலக்கட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு பொதுமக்களைகொலைசெய்து வந்தார். கேரளாவின் கண்ணூர், காசர்கோடு, வயநாடு மாவட்டங்களில் மொத்தம் 14 பேரை கொன்றார். கண்ணூரில் உள்ள தாலிபரம்பா பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்தபோது அவரது மகன் ரிப்பர் சந்திரனை பார்த்துவிட்டார். அதன்பிறகு ரிப்பர் சந்திரன் கர்நாடகா மாநிலம் சிவமொக்காவுக்கு சென்று தலைமறைவானார். அங்கு அவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கேரளா நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது. அதனை எதிர்த்து ரிப்பர் சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததோடு, தனது தண்டனையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதேபோல் ஜனாதிபதிக்கும் கருணை மனு அனுப்பினார். ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றமும் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கேரளாவை பொறுத்தவரை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை என்பது 34 என்ற அளவில் இருந்தது. அதிகபட்சமாக பூஜாப்புரா மத்திய சிறையில் 23 தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக கண்ணூர் மற்றும் விய்யூர் சிறைகளில் தலா 4 தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர். நேற்று கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் உள்ள தூக்கு தண்டனை கைதிகளின் எண்ணிக்கை என்பது 35 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கிரீஷ்மாவும் தூக்கில் போடப்பட உள்ளார்.

அதேபோல் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ஒரு பெண்ணுக்கு மட்டுமே தூக்கு தண்டனை என்பது நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் யார் என்றால் ரத்தன் பாய் ஜெயின். இவர் தனியார் கிளினிக்கில் மேலாளராக இருந்தார். இவர் தனது கணவருடன் 3 பெண்கள் கள்ள உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து அவர்களை கொன்றார். இவருக்கு டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது. அதனை பஞ்சாப் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பிறகு 1955ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி ரத்தன் பாய் ஜெயினுக்கு டெல்லி சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு எந்த பெண்ணுக்கும் இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் கரீஷ்மாவுக்கு தூக்கில் போடப்பட உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+