பந்தால் நஷ்டம்.. பிஎப்ஐயிடம் ரூ.5 கோடி வாங்கி தாங்க.. கேரள ஹைகோர்ட்டில் போக்குவரத்துறை வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23ம் தேதி நடந்த முழு அடைப்பில் மாநில போக்குவரத்துக்கு கழகத்துக்கு ரூ.5.06 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 13 மாநிலங்களில் என்ஐஏ, அமலாக்கத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

என்ஐஏ சோதனை
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 10 மாநிலங்களில் நடத்தப்படும் முக்கிய நடவடிக்கையில் என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது.

கேரளாவில் முழு அடைப்பு
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உள்நோக்கத்துடன் சோதனைகள நடத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டின. மேலும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 23ம் தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னின்று நடத்தியது.

கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பொதுவாக கேரளாவில் முழு அடைப்புக்கு 7 நாளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முழு அடைப்பு திடீரென்று நடத்தப்பட்டுள்ளது. இதனால் கேரள உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை மனு
இதற்கு மத்தியில் தான் கேரளா மாநில போக்குவரத்து கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில், ‛‛கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக மொத்தம் 58 பஸ்கள் சேதமடைந்துள்ளன. நியை டிரைவர், கண்டக்டர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல இடங்களுக்கான பஸ் சேவைகள் தடைப்பட்டன. ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் முழு அடைப்பு போராட்டத்தின்போது போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகை ரூ.5.06 கோடியை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications