"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழலில் அங்கு எப்போதும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஈழவ சமூகம் வாக்குகள் இந்த முறை கணிசமாகப் பிரிகிறது. அங்கு இந்த முறை கடுமையான போட்டி நிலவும் சூழலில், ஈழவ சமூகத்தினரின் வாக்குகள் பிரிவது வெற்றி தோல்வியை மாற்றுவதாகவே உள்ளது.
கேரளாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் களத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாரம்பரிய பலமாகத் திகழும் ஈழவ சமூகம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.. கேரளத்தின் மிகப் பெரிய இந்து சமூகமான இவர்கள், மக்கள்தொகையில் சுமார் 20-23% என்பதால் முக்கியமான அரசியல் செல்வாக்கைப் பெற்றுள்ளனர்.

கேரளா
பல மாவட்டங்களில் உள்ள ஈழவ சமூக மக்கள், சுமார் 40-45 தொகுதிகளில் கணிசமான அளவில் உள்ளனர். நீண்ட காலமாகவே இவர்கள் தான் தேர்தல் முடிவுகளையும், ஆட்சி யாருக்கு என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். பாரம்பரியமாக ஈழவ சமூகத்தினர் இடதுசாரிகளுக்கே ஆதரவு அளித்துள்ளனர். அதேநேரம், காங்கிரஸ் தலைமையிலான UDF-ம், சில பகுதிகளில் குறிப்பாக மத்திய கேரளப் பகுதிகளில், கணிசமான ஈழவ ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே ஈழவ சமூக மக்கள் இரு கட்சிகளுக்கும் முக்கிய சக்தியாக மாற்றியுள்ளது.
ஈழவ சமூக மக்கள்
ஆனால், இந்த முறை கேரளாவில் ஈழவ சமூக மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஈழவ வாக்காளர்களில் ஒரு பிரிவினர் பாஜகவை நோக்கிச் செல்வதே பெரிய வேறுபாடாகும். தாழ்த்தப்பட்டோர் அல்லாத வாக்குகளையும், குறிப்பாக ஈழவ சமூக வாக்குகளையும் ஈர்ப்பதே பாஜகவின் இந்த தேர்தலில் முக்கிய உத்தியாக உள்ளது. அது ஓரளவுக்குப் பலனும் கூட தருகிறது.
இப்போதும் பாஜகவுக்கு ஈழவ சமூக மக்கள் ஆதரவு பெரியளவில் இல்லை என்றாலும், சில தொகுதிகளில் 8-10% ஈழவ வாக்காளர்கள் பாஜகவை ஆதரிக்கத் தயாராக உள்ளனர் என்றே கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 5%க்கும் குறைவான வெற்றி வித்தியாசங்கள் கொண்ட மாநிலத்தில், இந்தச் சிறிய நகர்வுகூட அரசியல் கணக்குகளை மாற்றப் போதுமானது. இது இடதுசாரிக்கும் மட்டுமல்லாமல், காங்கிரஸுக்கும் பெரும் கவலை அளிக்கிறது.
மாறும் நிலைப்பாடு
ஈழவ சமூக அரசியலைப் பாதிக்கும் காரணமாக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் உள்ளது. ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதன் அரசியல் நிலைப்பாடு காலப்போக்கில் மாறியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், SNDP தலைமையின் ஒரு பகுதியினர் பாஜகவுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டி வருகிறது.. மேலும், இடதுசாரி அரசு சபரிமலை கோயில் விவகாரத்தைக் கையாண்டதும் இந்த சமூக மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலைமை சமாளிக்க இடதுசாரிகள் பம்பாவில் அய்யப்பப் பேரணி நடத்தி, இந்து வாக்காளர்களைக் கவர முயன்றனர். இருப்பினும், அது பெரியளவில் கை கொடுக்கவில்லை. ஈழவர்கள் சாதிய படிநிலையில் ஆதிக்கம் செலுத்தாத போதும், கேரளத்தின் மேல்தட்டு, வளமான சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். சிறு தொழில்கள், கயிறு, முந்திரி, வர்த்தக வலையமைப்புகள், வெளிநாடு வாழ் ஈழவர்களின் பணப் பரிமாற்ற வருமானங்கள் எனப் பலவற்றிலும் இவர்கள் உள்ளனர். இந்த பொருளாதார பலம் ஈழவ சமூகத்திற்கு சமூக, அரசியல் மூலதனமாக மாறுகிறது. இது அவர்களுக்குக் கூடுதல் அரசியல் செல்வாக்கைத் தருகிறது.
பாஜக ஆதரவு
சமீபத்திய தேர்தல் டேட்டாவும் கூட ஈழவ சமூகத்தினரின் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஈழவ சமூகத்தினர் கணிசமாக உள்ள தொகுதிகளில் வெற்றி வித்தியாசங்கள் பெரும்பாலும் 5%க்கும் குறைவாகவே இருந்துள்ளன. குறைந்தது 25 தொகுதிகளில், ஈழவ வாக்குகளின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளனர்.
2026 கேரள சட்டமன்றத் தேர்தல் - திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அமைச்சரும், நேமம் தொகுதி எல்.டி.எஃப் (LDF) வேட்பாளருமான வி.சிவன்குட்டி மற்றும் நடிகர் மோகன்லால் ஆகியோர் வருகை தந்தனர்.#KeralaElection2026 #Mohanlal #PollingDay #Sivankutty #Oneindia… pic.twitter.com/1FyNoK7qby
— Oneindia Tamil (@thatsTamil) April 9, 2026
என்ன நிலைமை
மேலும், இவர்கள் வாக்குகள் குறிப்பிட்ட பிராந்தியம் என இல்லாமல் கடலோர கேரளா, கிராமப்புற கேரளா, நகர்ப்புற பகுதிகள் எனப் பரவலாகவே உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இடதுசாரிகளுக்குக் கிடைத்த ஈழவ மக்கள் ஆதரவில் குறைந்தது 7% சரிவு பாஜகவுக்கு சாதகமாக மாறியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அதேநேரம் இத்தனை ஆண்டுகளாக இடதுசாரிகள் கொண்டு வந்த நலத்திட்டங்களால் பலனடைந்த ஈழவ சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்றும் அவர்களை ஆதரிக்கின்றனர். மறுபுறம் வேலையின்மை, விலைவாசி உயர்வு, சபரிமலை விவகாரம் போன்ற பிரச்சனைகளுக்கும் கணிசமானோர் எதிர்க்கிறார்கள்.
அதாவது ஈழவ சமூக வாக்குகள் முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் குறைவாகக் கணிக்கக்கூடியதாகவும், எளிதில் மாறும் தன்மை கொண்டதாகவும் மாற்றியுள்ளது. இவர்கள் வாக்குகளில் 5% மாறுவதும் கூட கேரள தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications