Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Christmas Bumper: 20 கோடி தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் இதுதான்.. கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி ரிசல்ட் வந்தாச்சு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சீட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி XC 138455 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. ரூ.20 கோடி என்பதால் யாருக்கு இவ்வளவு பெரிய தொகை அடித்துள்ளதோ என கேரள சேட்டன்கள் தேடி வருகின்றனர். இரண்டாவது பரிசு 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும், மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம், 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா அதன் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுலாவிற்கு எந்த அளவு பிரபலமானதோ அதே அளவிற்கு லாட்டரிகளுக்கும் பிரபலமானது என்று சொல்லலாம்.. இந்தியாவில் லாட்டரிக்கு அனுமதி உள்ள சில மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும்.

Kerala Christmas New Year Bumper BR-107 Rs20 Crore Jackpot to Be Drawn on Jan 24

கேரள லாட்டரி டிக்கெட்டுகள்

கேரளாவைப் பொறுத்தவரை மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அதிக பரிசுத்தொகை அளிக்கும் டிக்கெட்டுகளும் இங்குதான் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, ஓணம் பம்பரில் முதல் பரிசாக 25 கோடி பரிசு அளிக்கப்படுகிறது. கடந்த ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ.25 கோடி விழுந்தது.

கேரளாவில் வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் தினசரி ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசுத்தொகை பல கோடி என்பதால் கேரளா சேட்டன்கள் மத்தியில் இந்த டிக்கெட்டுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதல் பரிசு ரூ.20 கோடி விழுந்த எண்

கேரளாவிற்கு மருத்துவம், கல்வி, சுற்றுலா, தொழில் நிமித்தமாக செல்லும் வெளி மாநிலத்தவர்கள் கூட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம். கேரளாவில் கடந்த இரு மாதங்களாக பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் கோர்க்கி பவனில் இந்த டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி XC 138455 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.

2 ஆம் பரிசு ரூ.1 கோடி (20 பேருக்கு)

XA 226117, XA 528505, XB 182497, XB 359237, XB 413318, XC 103751, XC 203258, XC 239163, XC 312872, XC 362518, XD 241658, XD 286844, XE 130140, XJ 361121, XJ 407914, XJ 474940, XK 136517, XK 464575, XK 489087, XL 230208.

மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் (20 பேருக்கு):

XA 186875, XA 313052, XB 270516, XB 614143, XC 320074, XC 327710, XD 243814, XD 524852, XE 131125, XE 405008, XG 392937, XG 524925, XH 255158, XH 473917, XJ 251283, XJ 448784, XK 265116, XK 619119, XL 228819, XL 274908.

ரூ.400 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.20 கோடி ஆகும். இரண்டாவது பரிசு 20 பேருக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. 4-வது பரிசாக ரூ.3 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும்.

டிக்கெட் விற்பனை எங்கு அதிகம்

5-வது பரிசாக ரூ.2 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் 9 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். டிக்கெட் விற்பனை வழக்கம் போல பாலக்காட்டில்தான் அதிகம் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி பாலக்காட்டில் 12,20,520 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.

அடுத்த இடத்தில் திரிசூரில் 5,44,340 டிக்கெட்டுகளும், தலைநகர் திருவனந்தபுரத்தில் 5,15,090 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் குலுக்கலில் யார் முதல் பரிசு அடிக்கப் போகும் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். 20 கோடி பரிசு என்றால் சும்மாவா? ஒரே நாளில் தலைவிதியே மாறிப் போய்விடும் என்பதால் கேரளா லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு வின்னர் யார்

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பரில் XD 387132 என்ற எண்ணிற்கு பரிசு அடித்தது. கண்ணூரில் இந்த டிக்கெட் விற்பனையானது. இந்த ஆண்டு எந்த ஊரில் பரிசு அடிக்கப் போகிறதே என்ற எதிர்பார்ப்புடன் லாட்டரி பிரியர்கள் உள்ளனர்.

லாட்டரி டிக்கெட்டுகள் நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. லாட்டரியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. ஒரு தகவலாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தடை உள்ளது. கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது தண்டனைக்கு உரிய குற்றமாகும். பரிசும் கிடைக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+