"சபாஷ் காம்ரேட்" ரேஷன் கடையில் பொருள் தரவில்லையா.. பணத்தை கையில் கொடுக்கனும்.. கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: ரேஷன் உணவுப்பொருட்கள் வழங்கப்படாத பயனாளிகளுக்கு அதற்கு இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
Recommended Video
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள அரசை பொறுத்தவரை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிப்பதை கண்கூடாக பார்க்க முடியும். மக்களுக்காக அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பினராயி விஜயன் அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மீனவர்கள் வாழும் பகுதியினருக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை கேரள அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த வகையில், மக்களுக்கு ரேஷன் பொருட்கள் எந்தவித தடங்கலும் இன்றி நேர்மையாக கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. அதுதான், ரேஷன் பொருட்கள் கிடைக்கப் பெறாவர்களுக்கு பணம் வழங்கும் திட்டம்.
கேரளாவில் அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, அங்கு மொத்தம் 92.78 லட்சம் பேர் ரேஷன் மூலம் உணவுப்பொருட்களை பெறுபவர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன., இவர்களில் வறுமையான நிலையில் 40.82 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களில் 5.89 லட்சம் குடும்பங்கள் மத்திய அரசின் அந்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழும், 34.93 லட்சம் குடும்பங்கள் மாநில அரசின் 'முன்னுரிமை குடும்பங்கள்' திட்டத்தின் கீழும் வருகின்றன.
இவர்களில் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய ரேஷன் உணவுப்பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்தன. இதில் ரேஷன் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ரேஷன் கடைகளில் இனி இப்படியா.. பறந்த அடுத்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி.. நிம்மதியில் மக்கள்
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகிய கேரள அரசு, மேற்குறிப்பிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், அவ்வாறு ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காத பயனாளிகளுக்கு இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்கப்பெறாதவர்கள் மாவட்ட குறைதீர்வு அதிகாரியிடம் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும். குறைதீர்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி, புகாரில் உண்மைத்தன்மையை உறுதி செய்வார்கள். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அந்த உணவுப்பொருட்களுக்கு மாற்றாக பணம் கொடுக்கப்படும். இந்த பணமானது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய உணவுப்பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கும்.
கேரளாவில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 25 பயனாளிகளுக்கு பணம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.