நள்ளிரவில் பகீர்! "என்ன அடிக்க முதல்வர் ஆள் அனுப்புகிறார்!" கேரள ஆளுநர் பரபர புகார்.. என்ன நடந்தது
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை தன்னை தாக்கச் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லி செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஆரிப் முகமது கான் தனது காரை நிறுத்த சொன்னார்.
கேரள ஆளுநர்: பிறகு காரில் இருந்தபடி மாணவ அமைப்பினரைப் பார்த்து கோபமாக ஏதோ சொன்னார். தொடர்ந்து காரை விட்டு இறங்கிய ஆரிப் முகமது கான், போராட்டம் நடத்தியவர்களை கிரிமினர்கள் என விமர்சித்தார். மேலும், அந்த மாணவர்களை நோக்கிச் சென்ற கேரள ஆளுநர் அவர்கள் எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே கேரள ஆளுநரின் காரை மாணவ அமைப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஆளுநர் தனது காரில் இருந்து இறங்கி அங்கேயே செய்தியாளர்களிடமும் பேசினார். தன்னை தாக்கவும் காயப்படுத்தவும் ஆட்களை அனுப்பி கேரள முதல்வர் பினராயி விஜயன் 'சதி' செய்வதாகப் பரபர குற்றச்சாட்டையும் அவர் சுமத்தினார்.
முதல்வர் சதி: அவர் மேலும் கூறுகையில், "முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் போது இதுபோன்ற போராட்டங்களை அனுமதிப்பார்களா.. முதல்வர் வரும் போது போலீசார் கார் அருகே யாராவது வந்தால் சும்மா இருப்பார்களா.. ஆனால் இங்கே என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.. இதை வைத்துச் சொல்கிறேன் என்னை உடல்ரீதியாகக் காயப்படுத்தச் சதி செய்து இவர்களைக் கேரள முதல்வர் தான் அனுப்புகிறார். திருவனந்தபுரத்தின் சாலைகள் ரவுடிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
முதல்வருக்கும் எனக்கும் எதாவது விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால் அவர் என்னைத் தாக்கச் சதி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. கேரள அரசின் அரசியலமைப்பு இயந்திரம் சீரழிந்து வருவதையே இது காட்டுகிறது. போராட்டக்காரர்கள் தம்மை நோக்கி கறுப்புக்கொடி மட்டும் காட்டவில்லை. இருபுறமும் காரை தாக்கினார்கள்.
பரபர குற்றச்சாட்டு: இதன் காரணமாகவே நான் காரில் இருந்து இறங்கியதும் அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். அருகே இருந்த காரில் தான் ஒளிந்து இருந்தார்கள். ஆனால், முதல்வர் சப்போர்ட் இருப்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று சரமாரியாகச் சாடினார்.

போலீசார் விளக்கம்: ஆரிப் கான் மீது மூன்று இடங்களில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டதாகவும் அதில் இரண்டு இடங்களில் அவரது கார் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாகவும் கேரள ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் கேரள போலீசார் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். ஆளுநரின் வாகனத்தைப் போராட்டக்காரர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மறித்ததாகவும் அதிலும் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்ற இரண்டு சம்பவங்களில், கருப்புக் கொடிகள் மட்டுமே காட்டப்பட்டதாகவும் அதிலும் சுமார் 10-12 பேரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேரளா எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டும் ஆளும் இடதுசாரிகள் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கேரள ஆளுநரை நோக்கித் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் கேரள முதல்வரே தன்னை தாக்கச் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications