திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!" கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்... எதற்கு தெரியுமா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கேரள அரசு, அரசியல் தலைவர்கள் ஆகியோரின் மவும் அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சாடியுள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் புதிய 'மத்ரஸா' கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்​​மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

அப்போது நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்களித்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. இதற்காக அச்சிறுமி மேடைக்கு அழைக்கப்பட்டார்.

சிறுமி

சிறுமி

அந்த சிறுமிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பாணக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல் நினைவுப் பரிசை வழங்கினார். இருப்பினும். அப்போதே சிறுமி ஒருவரை எப்படி மேடைக்கு அழைக்கலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை முஸ்லீம் அறிஞர் எம்டி அப்துல்லா முசலியார் கண்டித்து, மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின.

சர்ச்சை

சர்ச்சை

சிறுமிக்கு விருந்தை அளித்த சில நொடிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை அழைக்கும் முஸ்லிம் அறிஞர் எம்டி அப்துல்லா முசலியார், "10ஆம் வகுப்புப் பெண்ணை மேடைக்கு அழைத்தது யார்? இப்படிப்பட்ட பெண்களை இங்கே அழைக்காதீர்கள். உங்களுக்குச் சமஸ்த விதிகள் தெரியாதா? நீங்கள்தானே அழைத்தீர்கள்? இனிமேல் சிறுமியின் பெற்றோரை மேடைக்கு வரச் சொல்லி விருதுகளைக் கொடுங்கள். நாங்கள் இங்கே இருக்கும்போது இதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள்" என்று கடுமையாகத் திட்டுவது வீடியோக்களில் பதிவாகி உள்ளது.

மவுனம்

மவுனம்

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்" என்றார்.

 சட்டமே அனைவருக்கும் மேலானது

சட்டமே அனைவருக்கும் மேலானது

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் கேரளாவில் சுமார் பத்தாயிரம் மதரஸாக்களைக் கொண்ட சமஸ்தாவின் தலைவர் என்று ஒரு நிருபர் கூறியதற்குப் பதில் அளித்த ஆரிப் கான், "ஜனநாயக ஆட்சியில் இது போன்றவை ஒரு பொருட்டல்ல. இதை கண்டு அஞ்சி நான் மவுனமும் காக்கப் போவதில்லை. அவருக்கு ஒரு லட்சம் மதரஸாக்கள் இருக்கலாம். அதற்காக நான் என் மனசாட்சியின்படி நடக்காமல் இருக்க முடியாது. அவர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் திறமையான இளம் பெண்ணை அவமானப்படுத்திப் புண்படுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை.

 அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்

இந்தியா சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் நாடு. அங்குச் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. நம் அனைவரையும் விடச் சட்டமே இங்கு முக்கியம். இது வெறும் குர்ஆன் கட்டளைகளை மீறப்பட்ட விவகாரம் மட்டுமில்லை. இது அரசியலமைப்பில் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளின் விதிகளை மீறுவதாகும்" என்றும் ஆரிப் கான் கூறினார்.

English summary
Kerala Governor Arif Mohammed Khan on Thursday said he was "disappointed" by the silence of the political, social, and economic leadership: (கேரளாவில் முஸ்லீம் சிறுமியை மேடைக்கு ஏற்றி விவகாரத்தில் சர்ச்சை) Muslim scholar who allegedly reprimanded organisers of an event in Malappuram for inviting a girl on stage to receive a reward
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X