ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. கேரளா சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது. உடல் நிலை சரியில்லாததால் இன்றைய கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.

one country one election kerala pinarayi vijayan

லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அதே நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை அந்தந்த மாநில தேர்தல் ஆணைம் நடத்துகின்றது. இந்த நிலையில் தான் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்ட மத்திய அரசு அதற்கான குழு அமைத்தது. இந்தக் குழு அளித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சட்டத்தை கொண்டு வர வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்களில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இவை அனைத்தும் எந்த சிக்கலும் இன்றி சுமூகமாக முடிந்தால் 2029ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலுடன் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், கேரள அமைச்சர் ராஜேஷ் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து அவையில் விவாதங்களுக்கு பிறகு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. முதல்வர் பினராயி விஜயன் இன்றைய அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை.

உடல் நல பிரச்சினைகளால் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது. தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை கோரியது. இந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+