கேரள லாட்டரியில் அடித்த யோகம்! கோழிக்கோட்டில் அந்த அதிர்ஷ்டசாலி யார்? முதல் பரிசு நம்பரை பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் தினந்தோறும் ரூ.70 லட்சம் முதல் பரிசு கொண்ட லாட்டரி விற்பனையும், வாரந்தோறும் புதன்கிழமை அன்று ரூபாய் 1 கோடி முதல் பரிசு கொண்ட பிஃப்டி பிஃப்டி லாட்டரி சீட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று புதன்கிழமைக்கான லாட்டரி பரிசு எண் அறிவிக்கப்பட்டது. இதில் கோழிக்கோட்டில் விற்கப்பட்ட லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு அடித்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு அனுமதி உள்ளது. கேரளா மட்டும் இன்றி பஞ்சாப், நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இருக்கிறது. கேரளாவில் மாநில அரசே லாட்டரியை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது. மாநில அரசுக்கு கணிசமான வரி வருவாயும் லாட்டரி துறை மூலமாக கிடைக்கிறது.

லாட்டரி விற்பனை மூலம் வருவாயை பெருக்கும் வகையில் தற்போது லாட்டரிக்கு அனுமதி இருக்கும் வெளி மாநிலங்களிலும் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய கேரள அரசு அனுமதி உள்ளது. கேரள லாட்டரியில் ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், விஷு பம்பர், சம்மர் பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என 6 பம்பர் லாட்டரிகள் உண்டு..
இதற்கு அதிகபட்சமாக முதல் பரிசாக ரூ. 25 கோடி வழங்கப்படுகிறது. இது போக அங்கு தினசரி லாட்டரி குலுக்கலும் நடைபெற்று வருகிறது. ரூ.70 லட்சம் பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் வாரத்திற்கு 5 நாட்களும், ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட பிஃப்டி பிஃப்டி லாட்டரி டிக்கெட்டுகள் புதன் கிழமை தோறும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, பிஃப்டி பிஃப்டி 126 லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதற்கான முதல் பரிசான ரூ.1 கோடி FU 761270 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரா பகுதியில் விற்கப்பட்டது ஆகும். சுரேஷ் என்ற லாட்டரி ஏஜெண்ட் இந்த லாட்டரியை விற்றுள்ளார். முதல் பரிசு வென்று கோடீஸ்வரர் ஆன அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை.
இரண்டாவது பரிசாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. FU 235174 என்ற எண்ணிற்கு இரண்டாவது பரிசு விழுந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது ஆகும். சுரேஷ் குமார் என்ற ஏஜென்சியில் டிக்கெட் விற்பனையாகியுள்ளது. மூன்றாவது பரிசாக 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தற்போது கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசு ரூ.20 கோடியாகும். இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி கிடைக்கும்.
மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம், 30 பேருக்கு கிடைக்கும். பரிசுத்தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால் இந்த முறை லாட்டரி விற்பனை தொடங்க கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் விற்பனை தொடங்கிய பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக லாட்டரி கடை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications