ரூ.12 கோடி.. அடிக்க போகும் அதிர்ஷ்டசாலி யார்னு தெரியலயே.. கேரளாவில் சூடுபிடிக்க தொடங்கிய பூஜா பம்பர்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனை முடிவடைந்தது. இதில் கர்நாடகாவை சேர்ந்த நபருக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அடித்தது. தற்போது கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியுள்ளது. பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 12 கோடி ஆகும். இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும்.
லாட்டரியில் ஏழை எளிய மக்கள் பெருமளவு பணத்தை இழந்ததால், தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. தமிழகம் மட்டும் இன்றி புதுவை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. எனினும், கேரளாவில் மாநில அரசே லாட்டரிகளை விற்பனை செய்கிறது.

கேரளாவில் தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறும். 40 ரூபாய் கொணட லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ. 75 லட்சம் அளிக்கப்படுகிறது. இதில் புதன்கிழமை மட்டும் ரூ.1 கோடி பரிசுத்தொகையாகும். இது போக ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர், கோடைகால பம்பர், ஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர் மற்றும் பூஜா பம்பர் லாட்டரி என ஆறு பம்பர் லாட்டரிகளுக்கான குலுக்கல் நடைபெற்று வருகிறது. அண்மையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.25 கோடி TG 434222 -என்ற எண்ணுக்கு அடித்தது.
கர்நாடகாவை சேர்ந்த அல்தாப் பாஷா என்பவருக்கு இந்த பரிசு கிடைத்தது. மெக்கானிக்காக வேலை செய்து வரும் அல்தாப் பாஷா கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறாராம்.. தற்போது வரிப்பிடித்தம், கமிஷன் போக... சுமார் 12.5 கோடி அளவுக்கு பணம் கிடைக்கும். ஓணம் பம்பர் லாட்டரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முதல் பரிசு அடித்ததால் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது ஆயுத பூஜா பம்பர் லாட்டரி விற்பனையை கேரள அரசு தொடங்கியுள்ளது. இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைக்கும். இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. 2 ஆம் பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும். மூன்றாவது பரிசாக ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தற்போது லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. லாட்டரி பிரியர்கள் ஆர்வமாக சீட்டை வாங்கி செல்கிறார்கள். இதற்கான குலுக்கல் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications