தினமும் ஒருத்தர் கோடீஸ்வரராக போறாங்க! கேரள லாட்டரியில் வந்தாச்சு மாற்றம்! சேட்டன்களுக்கு பணமழைதான்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி சீட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.70 லட்சம், ரூ.80 லட்சம் என்ற முதல் பரிசு கொண்ட லாட்டரி சீட்டுக்களில் இனி முதல் பரிசு ரூ.1 கோடியாக உயர்த்தி கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.40 கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகள் இனி ரூ.50க்கு விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு தனி மவுசு உள்ளது. இந்தியாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக கேரளாவும் உள்ளது. மாநில அர்சே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அங்கு வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி குலுக்கல் டிக்கெட்டுகள் மட்டும் இன்றி தினம் தோறும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

kerala-lottery-prize-structure-changed-now-rs-1-crore-prizes-every-day-ticket-price-also-increa

லாட்டரி டிக்கெட்டுகள்

இந்த பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரை பரிசு அளிக்கிறது. ஓணம் பம்பர் லாட்டரியில்தான் ரூ.25 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது நமக்கும் அதிர்ஷ்டம் அடித்து விடாதா என்ற ஆர்வத்தில் கேரள லாட்டரி பிரியர்களும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.

டிக்கெட்டுகள் வாங்கி பணத்தை இழந்தாலும் கூட.. அதிர்ஷ்ட தேவதையின் பார்வை எப்படியும் ஒரு நாள் நம் மீது படும் என்ற ஒரு ஆர்வத்தினால், லாட்டரி மீதான மோகம் அவர்களுக்கு குறைவது இல்லை. இதனால், கேரளா அரசு லாட்டரிகளில் கல்லா கட்டுகிறது. கேரள அரசுக்கு பெருமளவு வருவாயும் லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கிறது. கேரளாவில் தினமும் ரூ.40 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.1 கோடி பரிசு

வின்வின், ஸ்ரீசக்தி, ஃபிப்டி பிப்டி (இந்த லாட்டரி மட்டும் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது, பரிசுத் தொகையும் ரூ.1 கோடி ஆகும்), காருண்யா பிளஸ் நிர்மல், காருண்யா, அக்‌ஷயா என வாரத்திற்கு 7 நாளும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. இதில், புதன் கிழமை ஃபிப்டி ஃபிப்டி டிக்கெட்டிற்கு மட்டும் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படுகிறது. இதர டிக்கெட்டுகளுக்கு ரூ.75 லட்சம், 80 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

தினசரி விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட்டுகளின் விலையை ரூ.50 ஆக உயர்த்த கேரள அரசு திட்டமிட்டது. அதேபோல பரிசுத்தொகையையும் ஒரு கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு கேரள லாட்டரி விற்பனையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. டிக்கெட் விற்பனை குறையும் என்று லாட்டரி பிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

புதிய டிக்கெட்கள் அறிமுகம்

இந்த நிலையில், தற்போது தினமும் ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட டிக்கெட் முறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த புதன்கிழமை லாட்டரி அலுவலகங்களுக்கு புதிய டிக்கெட் வந்த நிலையில், நேற்று கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சுவர்ன கேரளம் என்ற பெயரில் இந்த டிக்கெட் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. அதுபோக சில டிக்கெட்டுகளும் மாற்றப்பட்டுள்ளன.

* வின் வின் - லக்கி ஸ்டார்
* பிஃப்டி பிஃப்டி - தனலட்சுமி
* நிர்மல் - சுவர்ன கேரளம்
* அக்‌ஷயா - சம்ருதி என டிக்கெட் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையும் அதிகரிப்பு

மே முதல் வாரத்தில் இருந்து இந்த டிக்கெட்டுகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. குறைந்தபட்ச பரிசுத்தொகையும் ரூ.50 ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 1.8 கோடி டிக்கெட்டுகள் தினமும் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இனி தினமும் ஒருவருக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அடிக்கும் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எனினும், இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன. லாட்டரி டிக்கெட்டுகளால் ஏழை எளிய மக்கள் தங்கள் சேமிப்பை எல்லாம் செலவு செய்து வறுமையில் வாடியதாலும், தற்கொலைகள் அதிகரித்ததாலும் தமிழக அரசு லாட்டரிக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+