Onam Bumper Lottery: கேரள ஓணம் பம்பர் லாட்டரி.. இன்று குலுக்கல்.. பரிசுத்தொகை விழுந்தால் வாங்குவது எப்படி?
திருவனந்தபுரம்: கேராளாவில் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி (Onam Bumper Lottery) விற்பனை சூடுபறக்க நடந்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை குலுக்கல் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் குலுக்கல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று குலுக்கல் நடைபெறுகிறது. இதனால் டிக்கெட் வாங்கிய பலரும் யாருக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அடிக்குமோ என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். முதல் பரிசு விழுந்தால் எவ்வளவு கிடைக்கும்?, அந்த பரிசுத் தொகையை எப்படி வாங்குவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலமாக உள்ளது. அங்கு தினம் தோறும் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறும். இதற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இதுபோல, வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது.

ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்
அந்த வகையில் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. ஜூலை மாத இறுதியில் இந்த டிக்கெட் விற்பனை தொடங்கியது. கேரளாவில் விற்கப்படும் லாட்டரி டிக்கெட்டுகளில் ஓணம் லாட்டரிக்குதான் லாட்டரி பிரியர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு.
ரூ.500 கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. இதனால், "முதல் பரிசு நமக்கு அடித்துவிடாதா?" என பகல் கனவு காணும் லாட்டரி பிரியர்கள், ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். வாங்கிய லாட்டரிகளை தினம் தோறும் பார்த்து பார்த்து கற்பனையில் மிதக்கும் லாட்டரி பிரியர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதியை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தார்கள்.
லாட்டரி குலுக்கல் எப்போது?
ஏனென்றால் அன்றைய தினம்தான் குலுக்கல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக குலுக்கல் தேதியை கேரள லாட்டரி துறை மாற்றியது. மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் லாட்டரிகளுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவும், கேரளாவில் பெய்த மழையாலும் லாட்டரி விற்பனை சரிந்துள்ளதால் விற்பனை தேதியை நீட்டிக்க வேண்டும் என்று லாட்டரி விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று லாட்டரி டிக்கெட் குலுக்கல் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி 4 ஆம் தேதி இன்று சனிக்கிழமை குலுக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 லட்சம் டிக்கெட்டுகள்
மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்படும் என்று கேரள லாட்டரி துறை கூறியிருந்தது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் ஏஜென்ட்களிடம் விற்பனைக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
லாட்டரி விற்பனையில் வழக்கம் போல பாலக்காடு மாவட்டமே டாப்பில் உள்ளது. அங்கு மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளன. அடுத்த இடத்தில் திருச்சூரும், தலைநகர் திருவனந்தபுரம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. குலுக்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டை வாங்கி வருகிறார்கள்.
பரிசு விவரங்கள் வெளியீடு
ஓணம் பம்பர் குலுக்கலை பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். முதல் பரிசு ரூ.25 கோடி. இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி, 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசு ரூ.50 லட்சம், 20 டிக்கெட்டுகளுக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
பரிசு வென்றவர்கள் உரிய லாட்டரி டிக்கெட் உடன் லாட்டரி அலுவலகங்களையோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அணுகலாம். 90 நாட்களுக்குள் டிக்கெட்டை கொடுக்க வேண்டும். 1 லட்சம் வரையிலான பரிசுத்தொகைகளை மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் கொடுத்து பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
பரிசு அடித்தால் என்ன செய்ய வேண்டும்
1 லட்சத்திற்கும் மேலான பரிசுத்தொகையை லாட்டரி தலைமை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். டிக்கெட்டிற்கு உரிய இடத்தில் பெயர், முகவரி கையெழுத்து இட வேண்டும். டிக்கெட்டின் நகல் சுய சான்றளிக்கப்பட்டு அளிக்க வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் போட்டோக்கள், கெசட்டெட் அதிகாரியின் சான்றொப்பம் உள்ளிட்டவையுடன் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டவிரோதம் ஆகும்
கேரள லாட்டரிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோதம். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து பரிசு அடித்தாலும் அதற்கு பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு. லாட்டரி டிக்கெட் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications