விஷு பம்பர் லாட்டரி: 12 கோடி முதல் பரிசு.. வாங்கி குவிக்கும் கேரள சேட்டன்கள்! அனல் பறக்கும் சேல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குலுக்கலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், தற்போதே டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளதாம். ரூ.12 கோடி வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்பு லாட்டரி பிரியர்களிடையே அதிகரித்துள்ளது.

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் மிகவும் பிரபலம். அங்கு தினம் தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசாக SG 513715 என்ற எண்ணிற்கு கிடைத்தது.

kerala-lottery-vishu-bumper-2025-br-103-ticket-sales-are-going-on-in-full-swing

விஷு பம்பர் லாட்டரி

பாலக்காடு பகுதியில் விற்கப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்தது. முதல் பரிசு ரூ.10 கோடி என்பதால் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்கள் மத்தியில் அதிகம் எழுந்தது. ரூ.10 கோடி முதல் பரிசாக வென்ற அதிர்ஷ்டசாலியை கேரள லாட்டரி துறை வலை வீசி தேடிய நிலையில், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவருக்கு முதல் பரிசு அடித்தது. அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறியதால், முதல் பரிசு விழுந்த நபர் யாரென்று தெரியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகே பரிசுத்தொகை கோரப்பட்ட தகவல் வெளிவந்தது. சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் முடிந்த அன்றே விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கியது. பிஆர்103 என்ற இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். முதல் பரிசாக ரூ. 12 கோடி கொடுக்கப்படுகிறது. இரண்டாவது பரிசு ரூ.1 கோடி ஆகும். மொத்தம் உள்ள ஆறு சீரிஸ்களில் ஒரு சீரிசில் உள்ள ஒரு எண் என மொத்தம் 6 டிக்கெட்டுகளுக்கு 1 கோடி பரிசாக அளிக்கப்படும்.

டிக்கெட் விற்பனை அமோகம்

மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம் கிடைக்கும். நான்காவது பரிசாக ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் மே 28 ஆம் தேதி நடைபெறுகிறது. டிக்கெட் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. லாட்டரி கடைகளில் விற்பனை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கேரளாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கூட ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி செல்வதாக லாட்டரி விற்பனையாளர்கள் கூறினர்.

இதனால், விற்பனை இந்த முறை துவக்கத்திலேயே சூடுபிடித்துவிட்டதாம். வழக்கம் போல தற்போதும் பாலக்காட்டில் தான் அதிக டிக்கெட் விற்றுள்ளதாக லாட்டரி விற்பனையாளர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் நமக்கும் என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற ஆர்வத்தில் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி செல்கிறார்கள்

முதல் பரிசு அடித்த கடை

சம்மர் பம்பர் லாடடரியில் முதல் பரிசு அடித்த லாட்டரி பாலக்காட்டில்தான் விற்பனை செய்யப்பட்டது என்பதால் இந்த முறை இயல்பை விட பாலக்காட்டில் டிக்கெட் விற்பனை அனல் பறக்கிறதாம். அதிலும் பரிசு அடித்த லாட்டரி கடையிலும் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. முதல் பரிசு விழுந்த லாட்டரி கடை என்பதால், இங்கு வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என பாலக்காட்டில் உள்ள கடையில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்களாம்.

வின் வின் லாட்டரி குலுக்கல்

கேரளாவில் இன்று வின் வின் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. ரூ.40 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ. 7,500,000 (75 லட்சம்) ஆகும். WA 720120 - என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. இரண்டாவது பரிசு ரூ.5 லட்சம் WK 127448- என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. மூன்றாவது பரிசு ( ரூ.1 லட்சம்) விழுந்த எண்கள் WA 578470, WB 797978, WC 858790, WD 736312, WE 149005, WF 440495, WG 332349, WH 779461, WJ 155815, WK 707830, WL 259950, WM 559064.

ஆறுதல் பரிசு (ரூ.8 ஆயிரம்)

WB 720120, WC 720120, WD 720120, WE 720120, WF 720120, WG 720120, WH 720120, WJ 720120, WK 720120, WL 720120, WM 720120.

4-வது பரிசு (ரூ.5 ஆயிரம்)

0239 0698 1380 1958 2729 4167 4374 5379 6080 7194 7278 7365 8062 8594 8873 8937 9100 9337

5-வது பரிசு அடித்த அதிர்ஷ்ட எண்:

0671 1162 1421 5419 5518 5987 7140 7817 8304 9739

இடுக்கியில் முதல் பரிசு

முதல் பரிசு அடித்த டிக்கெட் இடுக்கி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது ஆகும். கே.சரல் பானு என்ற ஏஜெண்டில் விற்கப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.75 லட்சம் அடித்துள்ளது. இரண்டாவது பரிசு விழுந்த WK 127448 நெய்யட்டின்காராவில் வாங்கிய டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. கேரள டிக்கெட்டுகளில் பரிசு ரூ.5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரிசுகள் விழுந்தால் உரிய ஆவணங்களை காட்டி வங்கி அல்லது லாட்டரி அலுவலகத்தில் பரிசுத்தொகையை உரிமை கோர வேண்டும்.

அதற்கு கீழ் உள்ள தொகை என்றால் ஏதாவது ஒரு லாட்டரி கடையில் வாங்கிக் கொள்ள முடியும். பெரிய அளவிலான தொகை விழுந்தால் 30 சதவிகித வரி மற்றும் 10 சதவீத கமிஷன் தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகை கொடுக்கப்படும். கேரள லாட்டரிகளை தடை செய்யபட்ட இடங்களில் விற்பனை செய்வது குற்றம் ஆகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

ஏழைகளின் சேமிப்பு வீணாகிறது

லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை யாரோ ஒருவருக்கு பரிசு அடித்தாலும் பல லட்சம் பேரின் சேமிப்பு வீணாவதுவதான் நிதர்சனமான உண்மை. இதனால், லாட்டரிகளை வாங்கி விளையாடுவது ஆபத்தான போக்கு என்பது சமூக ஆர்வலரின் கருத்தாக உள்ளது. ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் கடந்த 2003 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒரே நாளில் தமிழகத்தில் அனைத்து லாட்டரிகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் தடை உள்ளது. கேரளா போன்ற சில மாநிலங்கள் மட்டுமே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. கேரளா அரசுக்கு கணிசமான வருவாயும் லாட்டரி விற்பனை மூலமாக கிடைக்கிறது. கேரளாவில் லாட்டரி மற்றும் மதுவிற்பனை மூலமே அரசுக்கு வருவாய் கிடைப்பதாக அங்கு கடும் விமர்சனங்களும் எழாமல் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+