Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் அதிரடி.. பைக் ஓட்டும்போது பின்னால் இருப்பவரிடம் பேசினால் அபராதம்.. காரணம் தான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் பைக் ஓட்டுபவர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்போருடன் பேசினால் அது போக்குவரத்து விதி மீறல் எனவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிரடியாக உத்தரவு விடப்பட்டுள்ளது. நம் நாட்டில் முதல் முறையாக இத்தகைய வித்தியாசமான விதி கேரளாவில் அமலாகி உள்ள நிலையில் அதன் பின்னணி காரணத்தை கேட்டால் அசந்து போவீங்க.

கேரளா.. கடவுளின் தேசம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் இந்த மாநிலம் இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது. மலை பிரதேசம் அதிகம் உள்ள கேரளாவுக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா சென்று வருகின்றனர்.

kerala two wheeler

குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் கேரளாவுக்கு இருசக்கர வாகனங்களில் சுற்றுலா சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது கேரளாவில் இருசக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்து புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருப்பது பேசும் பொருளாகி உள்ளது.

இதுதான் ‛லக்’.. ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய கோவில் அர்ச்சகர்.. கைக்கொடுத்த கேரளா லாட்டரி!


இதுதொடர்பாக கேரளா மாநில மோட்டார் வாகன துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது வாகனம் ஓட்டும் நபர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்போரிடம் பேச கூடாது. இப்படி பேசும்போது கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கிறது. இதனை தடுக்க வேண்டி உள்ளது.

இதனால் இருசக்கர வாகனங்களில் வாகனம் ஓட்டும் நபர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்போரிடம் பேசினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் பின்னணியை பார்த்தால் இருசக்கர வாகன விபத்துகளை குறைப்பது தான் நோக்கமாக உள்ளது. அதாவது கேரளாவில் விபத்துகளை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் விதிகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விபத்துகளை குறைக்கும் வகையில் இன்னொரு சிறப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போதும் ஓட்டும் நபர் பின் இருக்கையில் இருப்போருடன் பேசும்போது கவனச்சிதறல்கள் ஏற்படும். இதனால் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் மீறப்பட்டு விபத்துகள் நடக்கின்றன. இதனால் காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனை தடுப்பதை நோக்கமாக கொண்டு தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இந்த உத்தரவை எப்படி பின்பற்றுவது என்பது தொடர்பாக கேரளா வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர். இதனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்த உத்தரவு தொடர்பாக மலையாளத்தில் வெளியாகி உள்ள செய்தித்தாள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதனை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். தற்போது இளைஞர்கள் டூவீலர்களில் காதலியுடன் சேர்ந்து பயணிக்கும்போது விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தோள்மீது சாய்ந்தபடி தொடர்ந்து பேசியபடி செல்கின்றனர். இதனால் இந்த உத்தரவு என்பது சரியானது என்று சப்போர்ட் செய்கின்றனர். அதேவேளையில் மறுபுறம் இன்னொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதாவது இந்த விதிகள் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்துமா? கார் உள்ளிட்ட பிற வாகனங்களில் செல்லும்போது வாகனம் ஓட்டுபவர்கள் மற்றவர்களுடன் பேசினால் பொருந்தாதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+