Onam Bumper Lottery: கேரளா ஓணம் லாட்டரியில் பெண்களுக்கு அடித்த யோகம்! கூட்டாக வாங்கிய டிக்கெட்டுக்கு விழுந்தது பரிசு
திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Onam Bumper Lottery) குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி நமக்கு அடித்து இருக்குமோ என பலரும் தங்கள் டிக்கெட்டை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கூட்டாக சேர்ந்து கேரள பெண்கள் வாங்கிய லாட்டரிக்கு ஓணம் பம்பரில் பரிசு விழுந்துள்ளது. இந்த பணத்தை வைத்து வீடு கட்ட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடைபெற்றது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக TH 577825 என்ற எண்ணிற்கு அடித்தது. TH 577825 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. இந்த லாட்டரி டிக்கெட்டை லதீஷ் என்ற ஏஜெண்ட் விற்றுள்ளார்.

கேரள ஓணம் பம்பர் லாட்டரி
நெட்டூரை சேர்ந்த யாரோ ஒருவர்தான் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்க கூடும் என்றும் எனக்கு சரியாக நினைவு இல்லை எனவும் லதீஷ் கூறியுள்ளார். 25 கோடியை வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிய கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கிடையே கேரள ஓணம் பம்பரில் குடும்பஸ்ரீ (kudumbashree) குழுவை சேர்ந்த பெண்கள் வாங்கிய டிக்கெட்டிற்கு ரூ.50 லட்சம் அடித்துள்ளது.
எதிர்பாரா அதிர்ஷ்டம்
இந்த எதிர்பாராத அதிர்ஷ்டம், குழுவை சேர்ந்த பெண்களுக்கு வீடுகளையும், நீண்ட நாள் கனவுகளையும் நனவாக்கும் வாய்ப்பை அளித்துள்ளது. கீரியானிக்கல் சௌமியா சுஜீவ், கொட்டுக்குன்னேல் பகுதியை சேர்ந்த ரம்யா அனூப், உஷா மோகனன், ஒலிக்கல் பகுதியை சேர்ந்த சாலி சாபு மற்றும் கும்பலந்தனாதில் உஷா சாபு ஆகியோர் இணைந்து, TH 668650 என்ற டிக்கெட்டை வாங்கியிருந்தனர்.
இந்த டிக்கெட், பூஞ்சார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவரிடம் வாங்கப்பட்டது. இந்த டிக்கெட்டிற்கு தான் மூன்றாவது பரிசு அடித்துள்ளது. பரிசு அடித்ததும் டிக்கெட்டை கேரள கிராமின் வங்கியின் பூஞ்சார் கிளையில் சமர்பித்துள்ளனர். ஆளுக்கு ரூ.100 போட்டு இந்த டிக்கெட்டை 5 பெண்களும் வாங்கியிருக்கிறார்கள்.
வீடு கட்ட போகிறோம்
இதில், சௌமியா, ரம்யா, உஷா மற்றும் சாலி ஆகியோர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளனர். சௌமியா மற்றும் ரம்யாவின் வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது கிடைத்து இருக்க கூடிய இந்த தொகையை கொண்டு தங்கள் வீடு கட்டுமான பணிகளை சிறப்பாக முடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஓணம் லாட்டரியில் 3 வது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படுகிறது. 50 லட்சம் பரிசு அடித்த எண்கள் விவரம் வருமாறு:-
1) TA 195990 (பாலக்காடு)
2) TA 774395 (எர்ணாகுளம்)
3) TB 283210 (பையனூர்)
4) TB 802404 (கன்ஹாங்காடு)
5) TC 355990 (எர்ணாகுளம்)
6) TC 815065 (பாலக்காடு)
7) TD 235591 (திருச்சூர்)
8) TD 501955 (எர்ணாகுளம்)
9) TE 605483 (வயநாடு)
10) TE 701373 (வயநாடு)
11) TG 239257 (வயநாடு)
12) TG 848477 (பையனூர்)
13) TH 262549 (திருர்)
14) TH 668650 (கோட்டயம்)
15) TJ 259992 (மானந்தவாடி)
16) TJ 768855 (அட்டிங்கல்)
17) TK 482295 (பட்டம்பி)
18) TK 530224 (மூவாட்டுப்புழா)
19) TL 270725 (கண்ணூர்)
20) TL 669171 (கோட்டயம்)
குறிப்பு:
கேரள லாட்டரிகளை தமிழகத்தில் விற்பனை செய்வது சட்டவிரோதம் ஆகும். தமிழகத்தில் விற்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து அதற்கு பரிசு அடித்தாலும் பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு.












Click it and Unblock the Notifications