பேஸ்புக் காதலனை சந்திக்க கிருஷ்ணகிரி வந்த கேரள மாணவிக்கு .. ஓடும் காரில் நடந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கிருஷ்ணகிரியில் உள்ள பேஸ்புக் காதலனை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்று கோழிக்கோட்டைச் சேர்ந்த 8ம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்த. 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக் காதலால் ஒரு பள்ளி மாணவியின் வாழ்க்கையில் விபரீதம் அரங்கேறியுள்ளது. வெறும் 13 வயதே ஆகும் மாணவி பேஸ்புக் பழக்கத்தால் மோசமான நிலையை சந்தித்திருக்கிறார். பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி லதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், காமராஜ் நகரை சேர்ந்த தரணி (22) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

பேஸ்புக் சாட்டிங்

பேஸ்புக் சாட்டிங்

தரணி, லதா உடன் பேஸ்புக்கில் சாட்டிங் செய்திருக்கிறார். அந்த சாட்டிங் நாளடைவில் நீண்ட உரையாடலாக மாறியது. பின்னர், இது காதலாகவும் மாறியது. மாணவி லதா தன் காதலனை நேரில் சந்திக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

காதலனை சந்திக்க விருப்பம்

காதலனை சந்திக்க விருப்பம்

இந்த சூழலில் மாணவி லதாவுக்கு உடல்நலம் பாதித்ததால் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு, கோழிக்கோடு மாவட்டம், மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரிடம் தனது காதலன் தரணியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.

உதவி செய்வதாக சீரழிப்பு

உதவி செய்வதாக சீரழிப்பு

அதற்கு உதவி செய்வதாக விபின்ராஜ் கூறியிருக்கிறார். இதன்படி கடந்த 2ம் தேதி தனது நண்பர்கள் அகித்ராஜ் (23), ஜோபின் (23) ஆகியோருடன் காரில் மாணவி லதாவை அழைத்து சென்றுள்ளார். வழியில் திடீரென காரை நிறுத்திய அவர்கள், மாணவியை காரில் வைத்தே பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார்கள்.

கூட்டிச் சென்ற காதலன்

கூட்டிச் சென்ற காதலன்

நடுவழியில் அனாதையாக நின்ற மாணவி லதா, காதலன் தரணிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனே, காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். இதற்கிடையே, மாணவி லதாவை காணாததால் கேரளாவின் முக்கம் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் மாணவியின் செல்போன் டவரை வைத்து விசாரித்தபோது, அவர் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரிய வந்தது.

காதலனும் கைது

காதலனும் கைது

அங்கு வந்த கேரள போலீசார் மாணவியை மீட்டதுடன், காதலன் தரணியை கைது செய்தனர். பின்னர், மாணவி அளித்த பலாத்கார புகாரின் பேரி்ல், விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபினையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி இளைஞர் தரணி, மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் செய்யவில்லை என்ற போதிலும், அவர் மைனர் பெண்ணை கடத்தியதாக கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+