பூஜா பம்பர் லாட்டரி! 12 கோடி வென்ற லக்கி மேன்! வலைவீசி தேடும் சேட்டன்கள்.. தமிழருக்கு அடித்ததா யோகம்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று நடந்தது. பாலக்காடில் உள்ள கிங் லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு ரூ.1 கோடி அடித்துள்ளது. பாலக்காடு தமிழக எல்லையோரம் உள்ள மாவட்டம் என்பதால் பரிசு வென்ற நபர் தமிழராக இருக்கவும் சான்ஸ் உள்ளது. இதனால் முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என கேரள சேட்டன்கள் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கேரள பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று (22.11.2025) நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ. 12 கோடி JD 545542 என்ற எண்ணுக்கு அடித்தது. கேரள தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில் உள்ள கிங் ஸ்டார் லாட்டரி ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது.

kerala-pooja-bumper-lottery-2025-who-is-the-lucky-winner-does-a-tamil-nadu-resident-hit-the-jackpot

தமிழகத்தை சேர்ந்தவருக்கு அடித்ததா?

இதே ஏஜென்சியில் தான் கடந்த சம்மர் பம்பரில் ரூ.10 கோடி முதல் பரிசு அடித்து இருந்தது. குலுக்கல் நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகியும் 12 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை. இதனால், அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என அறிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பாலக்காட்டை சேர்ந்த யாருக்கேனும் பரிசு அடித்து இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழக எல்லையோர மாவட்டம் என்பதால், கேரளாவிற்கு வந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் யாருக்கேனும் அடித்ததா இல்லை.. தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் அடித்ததா என்ற எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளிக்கு

கேரளாவிற்கு பாலக்காடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள், கல்வி, மருத்துவம், தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகிறார்கள். அப்படி வரும் சிலர் லாட்டரிகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி கூட, வாளையாறில் லாட்டரி டிக்கெட் வாங்கிய திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு அடித்தது.

இதேபோன்று பலமுறை வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு அடித்து இருப்பதாலும் பரிசு விழுந்து 24 மணி நேரம் ஆகியும் வெற்றியாளர் யார் என்பது தெரியாததாலும் ஒருவேளை தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கேனும் பரிசு விழுந்து இருக்கலாம் எல்லது கேரளாவில் உள்ள புலம் பெயர் தொழிலாளிகளுக்கு பரிசு அடித்து இருக்கலாம் என்று கேரள சேட்டன்கள் பரபரப்பாக பேசிக்கொள்வதை பார்க்க முடிகிறது.

ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்

லாட்டரியில் பம்பர் பரிசு விழுந்தால் சொந்தக்காரர்கள் தொல்லை தாங்க முடியாது என்பதால், சில லாட்டரி பிரியர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக பரிசு வாங்கிவிட்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. எனவே, லாட்டரி டிக்கெட்டுகளுடன் லாட்டரி அலுவலங்களுக்கு கேரள நபர்கள் யாரேனும் சென்று இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் நிலவுகிறது.

எது எப்படியோ இன்னும் ஓரிரு தினங்களில் லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசு போக இரண்டாவது பரிசாக ஐந்து டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.

1) JA 838734 (நெய்யாற்றின்கரை)
2) JB 124349 (திருர்)
3) JC 385583 ( பாலக்காடு )
4) JD 676775 (பாலக்காடு )
5) JE 553135 (ஆதூர் )

ஆகிய டிக்கெட்டுகளுக்கு இரண்டாவது பரிசு அடித்தது.

மூன்றாவது பரிசாக ரூ.50 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசு வென்ற டிக்கெட்டுகளின் விவரம்:

1) JA 369495 (திருவனந்தபுரம்)
2) JA 399845 (பாலக்காடு)
3) JB 556571 (கண்ணூர்)
4) JB 661634 (மானந்தவாடி)
5) JC 175464 (கண்ணூர்)
6) JC 732838 (சித்தூர்)
7) JD 354656 (எர்ணாகுளம்)
8) JD 549209 (அடிமாளி)
9) JE 264942 (நெய்யாட்டின்கரா)
10) JE 824957 (பையனூர்).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+