Thiruvonam bumber: ஓணம் பம்பரில் ரூ.25 கோடி! பரிசு அடித்ததும் வீட்டை பூட்டி விட்டு வெளியேறிய பெண்.. எங்கே சென்றார்?
திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் (Kerala Thiruvonam Bumper Lottery) நெட்டூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அடையாளத்தை காட்ட விரும்பாத அந்த பெண், வீட்டை பூட்டி விட்டு வெளியேறிவிட்டதாகவும், லாட்டரி அலுவலகத்தில் இன்று பரிசுத்தொகையை உரிமை கோரலாம் என்று கூறப்படுகிறது. ரூ.25 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் உறுதியாக தெரியாததால், சேட்டன்கள் மத்தியில் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் TH 577825 என்ற எண்ணுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு அடித்துள்ளது. குலுக்கல் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் 25 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியாததால், கேரள லாட்டரி பிரியர்கள், வெற்றியாளர் யாராக இருப்பார் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழருக்கு முதல் பரிசு அடித்ததா?
பாலக்காடு பகுதியில் உள்ள லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்து இருந்ததால், முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி தமிழராக கூட இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்கள் மத்தியில் ஏற்பட்டது.
ஆனால் பகவதி லாட்டரி ஏஜென்சியிடம் இருந்து லதீஷ் என்ற லாட்டரி வியாபாரி மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி விற்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது தெரியவந்தது. கொச்சி அருகே உள்ள நெட்டூர் பகுதியில் இந்த டிக்கெட்டுகளை விற்றதாகவும், தன்னிடம் தினசரி கூலி தொழிலாளர்கள் பலரும் டிக்கெட் வாங்கியதால், அவர்களில் யாரேனும் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம் என்று லதீஷ் கூறியிருந்தார்.
நெட்டூரை சேர்ந்த பெண்
இதற்கிடையே, நெட்டூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்குதான் முதல் பரிசு அடித்திருக்கலாம் என்று லாட்டரி ஏஜென்ட் ஆன லதீஷ் கூறியுள்ளார். தனது அடையாளத்தை காட்ட, பரிசு அடித்த பெண் விரும்பவில்லை போல் தெரிகிறது என்று கூறிய லதீஷ், "நேற்று கடைக்கு அந்த பெண்மணி வந்துள்ளார்.
ஆனால் கடையில் இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு திரும்பி சென்றுவிட்டார்" என்றார். தற்போது அவருடைய வீடும் வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது. தனது மகள் வீட்டிற்கு அவர் சென்று இருக்கலாம் என்று கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உறவினர்கள், சொந்தக்காரர்கள் டார்ச்சர்
கடந்த 2022 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்பிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி அடித்ததும், அவரது வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு படையெடுத்தனர். இதனால், வீட்டை பூட்டிவிட்டு சில நாட்கள் அனூப் தலைமறைவு ஆனார்.
அதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கவும், ஊடகங்களை தவிர்ப்பதற்காகவும் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி பெண் தனது அடையாளத்தை காட்ட மறுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஓணம் லாட்டரியில் பரிசு வென்ற பெண், அடிக்கடி லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டவர் இல்லை எனவும், ஓணம் லாட்டரிக்கு பலரும் கொடுத்த அதீத பில்ட்அப் காரணமாக லாட்டரியை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
கையில் எவ்வளவு கிடைக்கும்?
லாட்டரியில் பரிசு வென்றவருக்கு ரூ.25 கோடி முழுத் தொகையும் அளிக்கப்படாது. 10 சதவீத கமிஷன் தொகை பிடித்தம் செய்யப்படும். அதாவது ரூ.2.5 கோடி கமிஷன் தொகையாக பிடித்தம் செய்யப்படும். அது போக 30 சதவீதம் வரியாக பிடிக்கப்படும். இது ரூ.6.75 கோடியாக போய்விடும்.
அதுபோக செஸ் வரியும் பிடிக்கப்படும். மொத்தமாக வரி பிடித்தம், கமிஷன் தொகை போக ரூ.12.8 கோடி அளவிற்கு மட்டுமே முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு கிடைக்கும். முதல் பரிசு ரூ.25 கோடி போக, இரண்டாவது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 கோடியும், மூன்றாவது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.50 லட்சமும் அளிக்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications