Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Onam Bumper: முதல் முறையாக லாட்டரி வாங்கினேன்.. ரூ.25 கோடியை என்ன பண்ணுறதுன்னே! ஓணம் அதிர்ஷ்டசாலி சொல்றதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் (Onam Bumper Lottery) ரூ.25 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்குதான் ரூ.25 கோடிகள் கொட்டியுள்ளது. பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வரும் சரத் நாயர், பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியது இதுவே முதல் முறையாம். வாங்கிய முதல் டிக்கெட்டிற்கே ரூ.25 கோடி பரிசு அடித்ததால், அவர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி சரத் நாயர் என்ன சொன்னார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலை கேரள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நெட்டூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த பரிசுத்தொகை அடித்ததாக முதலில் தகவல் பரவியது. பரிசு வென்ற டிக்கெட்டை விற்பனை செய்த லதீஷ் என்ற லாட்டரி ஏஜெண்ட் இந்த தகவலை கூறியிருந்தார்.

kerala-thiruvonam-lottery-miracle-first-time-bumper-buyer-bags-25-crore-prize-in-alappuzha

பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ.25 கோடி

ஆனால், அந்த பெண் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், உண்மையில் பரிசு வென்றது வேறு ஒருவர் என்பது நேற்று தெரியவந்தது. ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்குதான் ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருப்பது தெரியவந்தது.

பரிசுத்தொகை அடித்த சரத் நாயர், நிப்பான் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நெட்டூரில் தனது மனைவி, குழந்தை மற்றும் பெற்றோருடன் வசித்து வரும் சரத், லாட்டரி டிக்கெட் வாங்குவது இதுவே முதல் முறையாம். முதல் முறையாக லாட்டரி டிக்கெட் வாங்கிய நிலையில், கனவில் கூட நினைத்து பார்க்காத திருப்பம் அவருக்கு நடந்துள்ளது.

முதன் முதலில் வாங்கிய டிக்கெட்

இவ்வளவு பெரிய தொகையை வாழ்நாளில் பார்க்க முடியுமா என நினைத்தவருக்கு நம்ப முடியாத அளவிற்கு அதிர்ஷ்டம் அதை உண்மையாக்கியுள்ளது. பரிசுத்தொகை விழுந்த தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள வங்கியில் டிக்கெட்டை கொடுத்துள்ளாராம் சரத். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் கூறியதாவது:-

"லாட்டரியில் முதல் பரிசு அடித்ததும் எனது சகோதரியிடம் தான் முதலில் தெரிவித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து டிக்கெட் நம்பரை உறுதி செய்து கொண்டோம். டிக்கெட்டை வங்கியில் சமர்ப்பித்த பிறகே இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். இதன்படி, தைக்காட்டுச்சேரியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் லாட்டரியை டெபாசிட் செய்துள்ளோம்.

பரிசுத்தொகையை என்ன செய்வதென்றே

ரூ.25 கோடி பரிசுத்தொகையை என்ன செய்வதென்று இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கு முன்பாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினாலும் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியது இதுவே முதல் முறை" என்றார்.

கேரள ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார்? எந்த ஊரில் விற்கப்பட்ட டிக்கெட் என்பதில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளியாகி வந்தன. முதலில் பாலக்காட்டில் வாங்கிய டிக்கெட்டிற்கு பரிசுத்தொகை அடித்ததாக தகவல் வெளியான நிலையில், பின்னர் கொச்சியை சேர்ந்தவருக்கு பரிசுத்தொகை அடித்ததாக சொல்லப்பட்டது.

கையில் எவ்வளவு கிடைக்கும்

ஆனால், திருவனந்தபுரம் ஆட்டிங்கல் பகுதியில் உள்ள பகவதி லாட்டரி ஏஜென்சியில் இருந்து லாட்டரி ஏஜெண்ட் லதீஷ் வாங்கி விற்பனை செய்த டிக்கெட்டிற்கே பரிசுத்தொகை அடித்தது தெரியவந்தது. வின்னிங் டிக்கெட்டை தவிர அதே எண்கள் மற்றும் சீரியல் நம்பர் மட்டும் வேறு கொண்ட 9 டிக்கெட்டுகளையும் அவரே விற்றுள்ளார்.

லாட்டரியில் முதல் பரிசு வென்ற சரத் நாயருக்கு வரி பிடித்தம், ஏஜெண்ட் கமிஷன், செஸ் வரி உள்ளிட்ட வரிகள் எல்லாம் போக ரூ.12.89 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்கும். பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும் ரூ.12.11 கோடி ஆகும்.

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓணம் லாட்டரியில் வெளி மாநிலத்தவருக்கு பரிசு அடித்த நிலையில், இந்த ஆண்டு கேரளாவை சேர்ந்தவருக்கு பரிசு அடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+