• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அலறிய இளம்பெண்.. ஆணியாலேயே குத்திய கொடூரம்.. கொடூர கொலையா.. விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரண்..!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆணியாலேயே முகத்தில் குத்தியும், கட்டையால் அடித்தும் கணவர் துன்புறுத்தி வந்த நிலையில், மனைவி மர்மமாக இறந்த நிலையில், அந்த கொடுமைக்கார கணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

  Kerala Vismaya மரணத்தில் ஷாக் திருப்பம் | Postmortem Report | Oneindia Tamil

  கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா... 24 வயது இளம்பெண்.. ஆயுர்வேத டாக்டர் படிப்பு படித்து வந்துள்ளார்... கடைசி வருடம் படித்து கொண்டிருக்கும்போதே கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.

  சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ். கிரண்குமார் என்பவர்தான் மாப்பிள்ளை.. இவர் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக இருக்கிறார்.

  கடந்த வருடம் மார்ச் மாதம் கல்யாணம் நடந்துள்ளது... அப்போது மகளுக்கு 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் போன்றவைகளை வரதட்சணையாக தந்துள்ளனர்.

  மோசமான பாதிப்பை ஏற்படுத்திய.. டெல்டா வகையைவிட ஆபத்தான டெல்டா+.. என்ன வித்தியாசம்? வேக்சின் பலன்தருமாமோசமான பாதிப்பை ஏற்படுத்திய.. டெல்டா வகையைவிட ஆபத்தான டெல்டா+.. என்ன வித்தியாசம்? வேக்சின் பலன்தருமா

   துன்புறுத்தல்

  துன்புறுத்தல்

  கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் சந்தோஷமாகவே தம்பதி இருந்தநிலையில், மெல்ல மெல்ல வரதட்சணை பிரச்சனை வெடித்தது.. மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு விஸ்மயாவை அடித்து துன்புறுத்தி உள்ளார் கிரண்குமார்.. இந்த கொடுமை நாளடைவில் கொடூரமானது.. ஆணிகளை மனைவியின் முகத்தில் வைத்து தாக்கி உள்ளார்.. கட்டைகளை எடுத்து மண்டையில் தாக்கி உள்ளார்.. சண்டை வரும்போதெல்லாம் எட்டி எட்டி வயிற்றிலேயே உதைத்துள்ளார்..

  விஸ்மயா

  விஸ்மயா

  ஒருமுறை, மகளை பார்க்க பெற்றோர் வந்துள்ளனர்.. அவர்கள் கண்முன்னாடியே விஸ்மயாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.. இதை பார்த்து பதறி போன பெற்றோர், அப்போதே போலீஸ் வரை புகார் தந்தனர்.. போலீசாம் கிரணை கைது செய்து வார்னிங் தந்து அனுப்பி வைத்தனர்.. அப்போதிருந்தே விஸ்மயா நொந்து போய் இருந்தார்.. அம்மா வீட்டிலேயே இருந்தநிலையில்தான், 2 மாசத்துக்கு முன்பு மனைவியை வீட்டுக்கு சமாதானம் செய்து அழைத்து வந்தார்..

   வேதாளம்

  வேதாளம்

  கணவர் திருந்தி இருப்பார் என்றுதான் நம்பினார்.. ஆனால், மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.. மறுபடியும் குடி, உதை, அடி, என கொடுமை தொடர்ந்தது.. அதற்கு பிறகு யாரிடமும் விஸ்மயா சரியாக பேசவில்லையாம்.. நடக்கும் கொடுமைகளையும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.. தன் அம்மாவிடம் மட்டும் அடிக்கடி சொல்லி அழுதுள்ளார்,..

  சரண்

  சரண்

  இப்படிப்பட்ட சூழலில்தான் விஸ்மயா மர்மமாக இறந்து கிடந்தார்.. இதற்கு பிறகு சடலத்தை கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.. தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் அவரின் உடம்பில் இல்லை... கழுத்தில் காணப்படும் காயங்கள் கண்டிப்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இல்லை என்று கூறிய உறவினர்கள், இது கொலைதான் என்று அடித்து சொன்னர்கள். இறப்புக்கு முந்தையநாள்கூட, தேர்வுக்கு தன்னை கணவன் அனுமதிக்கவில்லை என்று, தன் அம்மாவிடம் விஸ்மயா அழுததாகவும் சொன்னார்கள்.

   சரண்

  சரண்

  இதனால் கிரண்குமாரை விசாரிக்கலாம் என்றால், அதற்குள் அவர் தப்பி ஓடியிருந்தார்.. அவரை தேடி வந்தநிலையில், போலீஸில் சரணடைந்தார். கிரண்குமாரே நேற்றிரவு சூரானந்த் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவர் மீது சட்டப்பிரிவு 304, வரதட்சனை மரணம், சட்டப்பிரிவு 408 ஏ ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

   பாம்பு

  பாம்பு

  கேரளாவில் எத்தனையோ வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், இந்த கொலை அதிக அளவு உலுக்கி எடுத்துவிட்டது.. காரணம், கேரளாவில் கடந்த 2016 முதல் 2020 வரை 56 வரதட்சனை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த ஏப்ரல் மாதம் வரையில் 1080 கேஸ்கள் பதிவாகியுள்ளன... அந்த வகையில், பாம்பை ஏவி மனைவியை கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சியும் இன்னும் விலகவே இல்லை.

   விசாரணை

  விசாரணை

  அதற்குள் இன்னொரு பெண் மரணம் கேரளாவை அதிர வைத்துள்ளது.. கணவர் தற்போது கைதாகி உள்ள நிலையில் விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. விஸ்மயாவின் மரணம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மாவட்ட அளவில் குடும்பப் பிரச்சினைகள் தீர்வு மையங்களை வலுப்படுத்த கூறியுள்ளார்.. அதுமட்டுமல்ல, பெண்களிடமிருந்து வரும் குடும்ப வன்முறைப் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி மாவட்ட எஸ்பிக்களுக்கும் வலியுறுத்தியிருக்கிறார்.

  English summary
  Kerala Vismaya death was a case of murder not suicide
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X