சம்பளம் கிடையாது.. சாப்பாடு மட்டும் தான்.. ஸ்பெயினில் பண்ணை வேலை செய்யும் நடிகர் மோகன்லால் மகன்!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் உள்ள பண்ணையில் சம்பளம் இன்றி சாப்பாடு மற்றும் தங்கும் இடத்துக்காக வேலை செய்து வருகிறார் என்று அவரது தாய் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் மோகன் லால். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இருவர், சிறைச்சாலை, கமல்ஹாசனுடன் உன்னைப்போல் ஒருவன், நடிகர் விஜயுடன் ஜில்லா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மோகன் லால் மனைவி பெயர் சுசித்ரா.

இந்த தம்பதிக்கு மகன் உள்ளார். அவரது பெயர் பிரணவ் மோகன்லால். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யம் எனும் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தபோது அதில் உதவி இயக்குனராகவும் பிரணவ் மோகன்லால் பணியாற்றினார். சமீபத்தில் வெளியான ‛ஹிருதயம்' திரைப்படத்தில் அவர் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் தான் மோகன்லால் - சுசித்ராவின் மகன் ஸ்பெயினில் உள்ள பண்ணையில் சம்பளம் இன்றி உணவு மற்றும் தங்கும் இடத்துக்காக பண்ணையில் வேலை செய்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மோகன் லாலின் மனைவியும், பிரணவ் மோகன்லாலின் தாயுமான சுசித்ரா தான் கூறியுள்ளார்.
கேரளாவில் ரேகா மோகன் என்பவருடன் FTQ எனும் மலையாள யூடியூப் ஷோவில் பங்கேற்ற சுசித்ரா தனது மகன் பிரணவ் மோகன்லால் பற்றிய தகவலை கூறியுள்ளார். அதில் சுசித்ரா கூறியதாவது: என் மகன் பிரணவ்வை நாங்கள் அப்பு என்று தான் கூப்பிடுவோம். இப்போது ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு சம்பளம் கிடையாது. உணவு மற்றும் இருப்பிடத்திற்காக வேலை செய்கிறார்.
அங்கு விவசாய பணி செய்கிறார். சில நேரங்களில் குதிரைகளையும் கவனிக்க உதவுகிறார். வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும்போது அவர் செய்த செயல்கள் பற்றிய கதைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்வார். அவர் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவரது எண்ணம் வேறு வகையில் உள்ளது. வாழ்க்கையை மிகவும் பேலன்ஸாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.
இதனால் 2 ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எனக்கு கதை கேட்க பிடிக்கும். அதனால் அப்புவிற்காக கதைகளை கேட்டு வைத்துள்ளேன்.எனது கணவரும், மகனும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் இருவரின் நடிப்பையும் ஒப்பிட்டு பார்த்து கருத்து கூறுவார்கள். அப்படியான கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் இருவரும் சேர்ந்து நடிப்பதை நான் விரும்புவது இல்லை'' என்று கூறியுள்ளார்.
பிரணவ் மோகன்லாலுக்கு தற்போது 34 வயது ஆகிறது. 2002ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். 2002ல் வெளியான மோகன்லாலின் ஒன்னமன், 2003ல் வெளியான புனர்ஜனி ஆகிய இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 2018ல் ஆதி என்ற திரைப்படத்திலும், 2022ல் ஹ்ருதயம் என்ற திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார். இவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications