நீங்க யாரும் வாக்களிக்க கூடாது.. துப்பாக்கியோடு வந்த மாவோயிஸ்டு.. வயநாட்டில் தமிழர்களுக்கு மிரட்டல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் வசிக்கும் தமிழர்கள் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் மிக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,633 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,206 வேட்பாளர்கள், மணிப்பூர் பிசியில் இருந்து 4 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அஸ்ஸாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்தியப் பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), உத்தரப் பிரதேசம் (8), ராஜஸ்தான் (13), மற்றும் மேற்கு வங்கம் (3),கேரளா 20, ராஜஸ்தானில் 13தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளா மிரட்டல்; கேரளாவில் 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் வசிக்கும் தமிழர்கள் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சென்று துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள் விடுத்துள்ளனர். நீங்க யாரும் கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என்று துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நான்கு மாவோயிஸ்டுகள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதத்துடன் சென்று.. இங்கே இருக்குற யாரும் வாக்களிக்க கூடாது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நீங்கள் இங்கே அடிப்படை வசதிகளுடன் வாழ முடியம். மருத்துவமனை, மின்சாரம் எல்லாம் இதுவரை கிடைக்கவில்லை. நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
தேர்தலை புறக்கணியுங்கள். மாணந்தவாடி தல புழா எஸ்டேட் ஊழியர்களுக்கு எந்த வசதியும் இல்லை. உங்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. அரசுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். தேர்தலை புறக்கணியுங்கள்.
இதை மீறி தேர்தலில் வாக்களித்தால் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்று மிரட்டி உள்ளனர். 20 நிமிடம் விடாமல் மாவோயிஸ்டுகள் பேசி உள்ளனர். துப்பாக்கி வைத்தபடி வாக்களிப்பதற்கு எதிராக பேசிவிட்டு சென்றுள்ளனர். கேரளாவில் சில தொகுதிகள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காரணமாக பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. .
நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் உள்ள வயநாடு எல்லைக்கு உட்பட்ட பூத் பகுதிகள் எல்லாம் பதற்றம் நிறைந்த பகுதிகள் ஆகும். இந்த நிலையில்தான் நாளை மறுநாள் அங்கே தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கு கீழ் வரும் பகுதியாகும் இது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications