கேரளாவில் இறந்த பிறகு தம்பதிக்கு திருமண பதிவு! உள்ளூர் நிர்வாகம் செய்த அதிரடி! காரணம் தான் முக்கியம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்த பிறகு தம்பதிக்கு திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று அரசு உள்ளூர் நிர்வாகம் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
நாட்டில் வேறு எங்கும் இல்லாத நடைமுறை என்று சொல்லும் அளவுக்கு கேரளாவில் உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இறந்த பிறகு தம்பதிக்கு திருமண பதிவு செய்து உள்ளூர் சுய அரசு துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

கேரள தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள முள்ளூர் பகுதியை சேர்ந்த ஜோல்லி பி தாஸ் என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அங்குள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் நடைபெற்ற இந்த திருமணம் குறித்து உள்ளூர் பஞ்சாயத்தில் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லையாம்.
அதுபோல திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம். இதற்கு இடையில், கடந்த 2012 ஆம் ஆண்டு அஜித் குமார் காலமானார். அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது மனைவியும் உயிரிழந்தார். தாய் தந்தை இருவருமே உயிரிழந்து விட்ட நிலையில் இவர்களது பிள்ளையை ஜோல்லியின் தந்தை பராமரித்து வந்தார். இந்த நிலையில், தனது பேரனின் படிப்புக்காக பெற்றோரின் திருமண சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது.
இருவருமே இறந்து விட்ட நிலையில், திருமண சான்றிற்காக ஜோல்லியின் தந்தை விண்ணப்பித்த போது, இதுபோன்ற ஒரு சான்றிதழை தங்களால் வழங்க முடியாது என்றும் அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி தேவை எனவும் சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து சிறப்பு அனுமதியின் பேரில் இறந்த பிறகும் இந்த தம்பதிக்கு திருமண பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், " இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அனுமதியுடன் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார். முன்னதாக கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றது.
அதாவது, திருமணம் நடைபெற்று 53 ஆண்டுகள் கழித்து தம்பதி இறந்த பிறகு பாஸ்கரன் நாயர் - கமலம் தம்பதியினருக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருமண சான்று இல்லாததால் குடும்ப பென்ஷன் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்களது மகன் கோபகுமார் சிறப்பு அனுமதி கோரி இந்த திருமண சான்றிதழை வாங்கியிருந்தார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications