ஆஹா.. வயநாட்டில் ராகுல் காந்தி போட்டிருக்கும் டீ சர்ட்டை பாருங்க.. அடடே இது சூப்பரா இருக்கே
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அரசியலில் அன்பு என்ற வார்த்தைக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதை தனக்குக் கற்றுக்கொடுத்ததே வயநாடு மக்கள் தான் எனக் குறிப்பிட்டார். மேலும், அப்போது அவர் அணிந்திருந்த டீ- சர்ட்டும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடலாம்.. ஆனால், ஒரு தொகுதியில் மட்டுமே பிரதிநிதியாக இருக்க முடியும்.

ராகுல் காந்தி: ரேபரேலி தொகுதியைத் தக்கவைக்க முடிவு செய்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். அங்கு ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. வயநாட்டில் வரும் நவ. 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. தனது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வயநாட்டில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
"எங்கள் தந்தையை கொன்றவர்கள்.." வயநாட்டில் கலங்கிய ராகுல் காந்தி.. பிரியங்கா குறித்தும் நெகிழ்ச்சி
டீசர்ட்: அதன்படி இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஒன்றாகக் கலந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த ஐ லவ் வயநாடு டீ சர்ட் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சாரத்தின் போது ஒரு கட்டத்தில் மக்களிடம் தான் அணிந்து வந்துள்ள டீ சர்ட்டையும் ராகுல் காந்தி காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நான் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கிய போதே அது ஆச்சரியமான அனுபவத்தைக் கொடுத்தது. அந்த யாத்திரையின் நோக்கம் அரசியல்.. ஆனால் யாத்திரை தொடங்கிய போதே மக்கள் என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டனர். மக்கள் என் மீது அன்பு செலுத்துவதாகக் குறிப்பிட்டனர். அப்போது தான் அரசியலில் அன்பு என்ற வார்த்தை இல்லாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டதை உணர்ந்தேன்.
வயநாட்டுக்கு வந்த பிறகே நான் அரசியலில் அன்பு குறித்துப் பேச ஆரம்பித்தேன். வயநாட்டு மக்கள் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதை உணர்ந்தேன்... அரசியலில் அன்புக்கு மிக முக்கிய இடம் உண்டு என்பதை வயநாட்டு மக்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் தான் இந்த டீசர்ட்டை அணிந்து வந்துள்ளேன்" என்று கூறி டக்கென திரும்பித் தான் அணிந்திருந்த டீ-சர்ட்டை மக்களிடையே காட்டி பேசினார்.
"நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்போம்.." ராகுல் காந்தி திட்டவட்டம்!
பிரியங்கா காந்தி: முன்னதாக அங்குப் பேசிய பிரியங்கா காந்தி, "வயநாடு மக்கள் சரியான அரசியலை அங்கீகரிக்கிறீர்கள்.. உண்மை என்ன என்பதை உங்களுக்குத் தெரியும்.. வயநாட்டில் நான் எங்குச் சென்றாலும், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை உணர்வைக் காண முடிகிறது.. மசூதிகள், கோவில்கள், மற்றும் தேவாலயங்கள் அமைதியாக இருக்கின்றன.. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பாஜகவின் பிளவுபடுத்தும் திட்டத்தை முறியடித்துவிட்டு ஒன்றாக இருக்கிறார்கள்" என்றார்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், சிபிஐ சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். அதேபோல பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications