கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்.. பலியான இளைஞருக்கு பாதிப்பு உறுதி.. ஹை அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்த 24- வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் அருகே உள்ள நடுவத் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் படித்து வந்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற கேரளாவிற்கு வந்த அந்த இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டார்.

நிபா வைரஸ் உறுதி: 4 மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த இளைஞர் கடந்த 9 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்தது. இதனால் அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன் முடிவுகள் கிடைத்த நிலையில், உயிரிழந்த இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 பேர் குழு: இதையடுத்து, 16 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள கேரள சுகாதாரத்துறை நிபா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதால் அவர்களின் ரத்த மாதிரிகளையும் எடுத்து கோழிக்கோட்டில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது.
151 பேர் பட்டியல்: உயிரிழந்த 24 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் சில இடங்களுக்கு பயணம் செய்துள்ளார். எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளர். தொடர்பில் இருந்த 5 பேரது மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் உள்ளன.
எனினும், யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் வீணா ஜார்ஜ் கூறினார். அந்த இளைஞர்களுடன் தொடர்பில் இருந்ததாக 151 பேரது பட்டியலை கேரள சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதில் 2 பேர் மஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மஞ்சேரி மற்றும் நிலாம்பூர் டவுன்களுக்கு இடையே உள்ள திருவாலி பஞ்சாயத்து பகுதியில் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிவது கட்டாயம்: நிபா வைரஸ் அறிகுறிகள் யாருக்கேனும் இருந்தால் உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக மருத்துவக் குழு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். திருவாலி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு நிபா உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நாளை முதல் யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என தீவிர கண்காணிப்பு நடைபெறும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் என்ன?: காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை நிபா வைரஸ் பாதிப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஆகும். இது மூளையழற்சி போன்ற கடுமையான சுவாச மற்றும் நரம்பியல் பிரச்சினைகளையும் கூட ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டது. நிபா வைரசுக்கு உயிரிழப்பு விகிதம் அதிகம். அதாவது நிபா வைர்ஸ பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தடுப்பூசி இல்லை: இதற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை அல்லது தடுப்பூசியும் இல்லை. எனவே, முடிந்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டோரைத் தனிமைப்படுத்துவதே பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். நிபா வைரஸ் நமது உடலில் பரவி 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்படும். அரிதான சில நேரங்களில் 45 நாட்கள் கழித்துக் கூட அறிகுறிகள் தோன்றும். நிபா வைரஸ் என்பது பொதுவாக பன்றி வெளவால் போன்றவற்றிடம் இருந்து மனிதருக்கு பரவும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது. விலங்குகள், பறவைகள் சாப்பிட்ட பழங்களை சாப்பிடக் கூடாது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications