அரசு மரியாதை இல்லை.. 150 கிமீ தூரத்தை கடக்க 28 மணி நேரம்! கேரளாவே திரண்ட உம்மன் சாண்டி இறுதி ஊர்வலம்
திருவனந்தபுரம்: மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடல் அவரது இறுதி விருப்பத்தின்படி அரசு மரியாதையின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. உம்மன் சாண்டி உடலில் தேசியக்கொடி போர்த்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும், அவரது இறுதி ஊர்வலத்துக்கு ஒட்டுமொத்த கேரளாவே திரண்டு அஞ்சலி செலுத்தியது.
உம்மன் சாண்டி மறைவு: கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் அவரது உடல் பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்பு திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன்பிறகு இரவில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டியின் உடல், பின்னர் அங்கிருந்து கேரள மாநில காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊருக்கு இறுதி பயணம்: அதனைத்தொடர்ந்து இரவில் உம்மன் சாண்டியின் உடல் மீண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு கொண்டு செல்ல, அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது. உம்மன் சாண்டியின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேரள அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டது.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றதால் உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஊர்ந்தபடியே சென்றது. இறுதி ஊர்வலமாகச் சென்ற வாகனம் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு புறப்பட்ட உம்மன்சாண்டி இறுதி ஊர்வலம், சங்கனாச்சேரிக்கு நேற்று காலைதான் வந்தடைந்தது.
28 மணி நேரம் ஊர்வலம்: திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை செல்ல உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்திற்கு 28 மணி நேரம் ஆனது. இந்த 150 கி.மீ தூரம் வழக்கமாக சுமார் 3 - 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரம். ஆனால், அதைக் கடக்க 28 மணி நேரம் ஆனதே எந்தளவுக்கு கூட்டம் திரண்டிருந்தது என்பதற்கான சாட்சி.
பின்னர் மாலையில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு உம்மன் சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உம்மன் சாண்டியின் உடல், தேசியக்கொடி போர்த்தப்படாமல் அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை வேண்டாம்: உம்மன் சாண்டியின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கேரள அரசு திட்டமிட்டது. ஆனால், உம்மன் சாண்டியின் கடைசி விருப்பத்தின்படி, எந்தவித அரசு மரியாதையும் இன்றி அவரது உடலை அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் கேரள மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து உம்மன் சாண்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது.

அதன்படி, உம்மன் சாண்டி உடல் அரசு மரியாதை இன்றி, தேசியக்கொடி போர்த்தப்படாமல் உம்மன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உம்மன் சாண்டியின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில ஆளுநர்ர் ஆரிப் முகமது கான், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications