Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Onam Bumper Lottery: பெயிண்ட் கடை ஊழியரின் தலைவிதியே மாறிப்போச்சு.. கேரள ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற யோகக்காரர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரு மாதங்களாக நடந்து வந்த ஓணம் பம்பர் லாட்டரிக்கான (Onam Bumper Lottery) குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.25 கோடி பெண் ஒருவருக்கு அடித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ.25 கோடி ஆலப்புழாவை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு அடித்துள்ளது. சாதாரண பெயிண்ட் கடை ஊழியர் தற்போது ரூ.25 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.

கொச்சி நெத்தூரில் உள்ள லாட்டரி ஏஜென்ஸியில் தான் இந்த டிக்கெட்டை பெயிண்ட் கடை ஊழியரான சரத் எஸ் நாயர் என்பவர் வாங்கியிருக்கிறார். தற்போது ரூ.25 கோடி பரிசு அடித்ததன் மூலம் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறாராம்.

Onam Bumper Lottery Kerala Lottery Lottery Prize

ஓணம் பம்பர் லாட்டரி

கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் நாமும் பணக்காரர் ஆகிவிடமாட்டோமா, அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீசாதா என்ற ஆசையில் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள். ரூ.1 கோடி பரிசுத்தொகைக்கே இப்படி என்றால், ரூ.25 கோடி முதல் பரிசு என்றால் சும்மா விடுவார்களா..

அப்படித்தான் கடந்த இரு மாதங்களாக கேரளாவில் நடந்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை கேரள சேட்டன்கள் வாங்கி குவித்தனர். ரூ.500 விலை என்றாலும் பரிசு அடித்துவிட்டால் வாழ்க்கை அப்படியே மாறிவிடும் என்ற ஆசையில் பலரும் டிக்கெட் வாங்கி வந்தனர். கேரளாவுக்கு டூர் சென்று வரும் தமிழர்களும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.

முதல் பரிசு யாருக்கு?

முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் லாட்டரி டிக்கெட் விற்பனை களை கட்டியது. கிட்டத்தட்ட 80 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பாலக்காடில் தான் அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்த குலுக்கல் சனிக்கிழமை நடந்தது. TH 577825 என்ற எண்ணுக்கு தான் ரூ.25 கோடி பரிசு விழுந்தது. பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட் என கூறப்பட்டது.

இதனால் யாருக்கு இந்த பரிசு விழுந்தது என பலரும் தேட தொடங்கினர். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு கர்நாடகாவிலும், கடந்த ஆண்டு திருப்பூரை சேர்ந்தவருக்கும் விழுந்திருந்ததால் முதலில் தமிழர் யாருக்கோ விழுந்திருக்கும் என கணிக்கப்பட்டது. தொடர்ந்து பெண் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதால் அவருக்கு விழுந்திருந்தது என சொல்லப்பட்டது.

Onam Bumper Lottery Kerala Lottery Lottery Prize

ஆலப்புழாவை சேர்ந்தவருக்கு கொட்டிய யோகம்

இந்த நிலையில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆலப்புழா மாவட்டம் துறவூரைச் சேர்ந்த சரத் எஸ் நாயர் என்பவருக்கு தான் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. பெயிண்ட் கடை ஊழியரான இவர் லாட்டரி சீட்டை கொச்சி நெத்தூரில் உள்ள கடையில் வாங்கியிருக்கிறார். நெத்தூரில் உள்ள லத்தீஷ் என்பவர் தான் இந்த டிக்கெட்டை சரத் எஸ் நாயரிடம் கொடுத்து இருக்கிறார்.

முதலில் பாலக்காடில் தான் இந்த டிக்கெட் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பாலக்காட்டில் இருந்து பகவதி லாட்டரி ஏஜென்சி மூலம் கொச்சியில் உள்ள வைட்டிலாவில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்குத்தான் இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது. ரூ.25 கோடி பரிசு வென்ற சரத் எஸ் நாயர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திகைத்துள்ளாராம்.

இரண்டாம் பரிசுகள் (தலா ₹1 கோடி):

TG 307775, TD 779299, TB 659893, TH 464700, TH 784272, TL 160572, TL 701213, TL 600657, TG 801966, TG 733332, TJ 385619 ஆகிய எண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பரிசுகள் (தலா ₹50 லட்சம்):

TA-195990, TB-802404, TC-355990, TD-235591, TE-701373, TG-239257, TH-262549, TJ-768855, TK-530224, TL-270725, TA-774395, TB-283210, TC-815065, TD-501955, TE-605483, TG-848477, TH-668650, TJ-259992, TK-482295, TL-669171 ஆகிய எண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரிசு விவரங்கள்

இரண்டாம் பரிசாக ₹1 கோடி வீதம் 20 பேருக்கும், மூன்றாம் பரிசாக ₹50 லட்சம் வீதம் 20 பேருக்கும், நான்காம் பரிசாக ₹5 லட்சம் வீதம் 10 தொடர் டிக்கெட்டுகளுக்கும், ஐந்தாம் பரிசாக ₹2 லட்சம் வீதம் 10 தொடர் டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும். திருவோணம் பம்பர் லாட்டரி சீட்டுகளில் மொத்தம் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

பாலக்காடு மாவட்டத்தில் 14.07 லட்சம் டிக்கெட்டுகளுடன் அதிக விற்பனை நடந்துள்ளது. கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த திருவனந்தபுரத்தை பின்னுக்குத் தள்ளி, திரிசூர் 9.37 லட்சம் டிக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. திருவனந்தபுரத்தில் 8.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

குறிப்பு

கேரள லாட்டரி சீட்டுகளை தமிழகத்தில் விற்பனை செய்வது சட்டவிரோதம் ஆகும். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து பரிசு அடித்தாலும் அதற்கு பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு. லாட்டரி டிக்கெட் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+