Onam Bumper Lottery: ஓணம் பம்பரில் 25 கோடி அடித்தும் வீடு கூட கட்டாத அனூப்! மொத்த பணத்தையும் என்ன செய்தார் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் (Onam Bumper Lottery) ரூ 25 கோடி பரிசு வென்ற அனூப், கேரளாவில் பிரபலமான செலிபிரட்டி போல மாறிவிட்டார். அந்த அளவுக்கு அவரை தெரியாத ஆளே இல்லை என சொல்லும் அளவிற்கு பிரபலமான நபராக ஆகியுள்ள அனூப், லாட்டரியில் பரிசு வென்றதும் உறவினர்கள் தொல்லை தாங்க முடியாமல் தலைமறைவு ஆன செய்தி அப்போது பெரிய அளவில் விவாதப்பொருளாகியிருந்தது. லாட்டரியில் பரிசு அடித்த மொத்த தொகையையும் என்ன செய்கிறேன் என்பது பற்றி அனூப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பம்பர் பரிசாக ரூ. 25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்தது. லாட்டரியில் அடித்த 25 கோடியால் ஒரே நாளில் நாடு முழுக்க பிரபலம் ஆனார்.

ரூ. 25 கோடியை என்ன செய்தேன் தெரியுமா?
கடன் தொல்லையால் தவித்து வந்த அனூப், வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக 25 கோடி விழுந்து ஓவர் நைட்டில் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டது அதிர்ஷ்டம். இதையடுத்து லாட்டரி கடை ஒன்றை துவக்கிய அனூப் அதன்பிறகு, அதை விட்டுவிட்டு ஹோட்டல் நடத்தி வருகிறார். ஓணம் லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசு அடித்த தொகையை என்ன செய்தேன் என்பது குறித்து யூடியூப் சேனலுக்கு அனூப் பேட்டி அளித்துள்ளார். அதில் அனூப் கூறியிருப்பதாவது:-
வீடு கூட கட்டவில்லை
லாட்டரியில் பணம் அடித்ததுமே அதற்கு முந்தைய ஆண்டு பரிசு அடித்தவர்கள் எனக்கு போன் செய்தனர். அனைவரது ஆலோசனையையும் கேட்டுக்கொண்டேன். எதையுமே அலட்சியம் செய்யவில்லை. லாட்டரியில் பணம் அடிக்கும் முன்பு, பரிசு அடித்தால் ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என நினைப்பேன். அப்போது கையில் பணம் இருக்காது.
வட்டியை மட்டும் தான் பயன்படுத்துகிறேன்
ஆனால் தற்போது பணம் இருந்தாலும் அந்த கனவு நனவாகவில்லை. புதிதாக வீடு கூட கட்டவில்லை. வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவில்லை. சொல்லப்போனால் லாட்டரியில் பரிசாக விழுந்த 25 கோடியை இன்னும் எடுக்க கூடவில்லை. வட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். இதை போன்ற ஒரு பணம் இனி எனக்கு கிடைக்க போவது இல்லை. எனவே அதை இரு மடங்காக ஆக்க வேண்டும். எவ்வளவு தொகை பரிசு அடித்தாலும் சரி..
கடைசியில் பாதி தொகைதான் நம் கைக்கு கிடைக்கும். 15 கோடி லாட்டரி துறை கொடுத்தது. அதன்பிறகு வரிகள் கட்ட வேண்டும். மத்திய மாநில அரசு வரி கட்ட வேண்டும். இந்த வரிகளை இரண்டு ஆண்டுக்குள் செலுத்த வேண்டும். எனக்கு பரிசு அடித்ததும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். ஆனால், அது தவறு என்பது தாமதமாகத்தான் உணர்ந்தேன்.
லாட்டரியில் பணம் அடித்தால் யாரிடமும் சொல்லாதீங்க
அனைவருக்கும் விஷயம் தெரிந்ததும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. எப்போதும் எனது வீட்டில் ஆட்கள் இருக்கும். லாட்டரியி பணம் அடித்தால் யாருக்கும் வெளியில் சொல்லிவிடாதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால் அவர்கள் அதிருப்தி அடைவார்கள்.
கார் கூட வாங்கவில்லை
அதன்பிறகு தேவையற்ற பிரச்சினைகளும், வாக்குவாதமும் தான் ஏற்படும். கடந்த காலத்தில் லாட்டரி வென்ற பலரும் பணம் எதுவும் நிற்கவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்வார்கள். பணம் கிடைத்தவுடன் அதை கட்டுப்பாடு இல்லாமல் செலவு செய்வதே அதற்கு காரணம்" என்றார்.
அனூப் புதிதாக வீடு கட்டவில்லை என்றாலும் ஏற்கனவே கட்டப்பட்ட பழைய வீடு ஒன்றை மற்றொருவரிடம் இருந்து வாங்கியுள்ளாராம். பணத்தை எப்படி சரியாக செலவு செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக கார், வீடு, தொழில் என எதற்கும் அதை செலவு செய்யவில்லையாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications