'வந்தே பாரத்’க்காக பிற ரயில்கள் தாமதம்.. கேரளாவில் மனித உரிமைகள் ஆணையம் போட்ட அதிரடி ஆர்டர்! பின்னணி
திருவனந்தபுரம்: வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்கள் நிறுத்தப்படுவது பயணிகளின் உரிமையை மீறும் செயல் என்றும் இது தொடர்பாக ரயில்வே உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் கேரள மனித உரிமைகள் ஆணையம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. சென்னை - நெல்லை, சென்னை - கோவை உள்பட நாடு முழுவதும் 33 வந்தே பாரத் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட அதிவேகத்தில் இயக்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், வைஃபை, அகன்ற ஜன்னல்கள் பயணிகளின் பயண அனுபத்தை சொகுசாக்கும் வகையில் பல வசதிகள் உள்ளன. இதனால், வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்ய பயணிகளும் அதிகம் விரும்புகின்றனர். எனினும், வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாகவும் சில ரயில்களின் நேரமோ மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியதும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடங்களுக்கு முன்பே புறப்படும் என்று ரயில்வே அறிவித்தது. இதனால், வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்களை ரயில்வே காவு கொடுப்பதாக பயணிகள் விமர்சித்து இருந்தனர். கேரளாவிலும் தற்போது இதே மாதிரியான பிரச்சினை வெடித்துள்ளது. அதாவது, வந்தே பாரத் ரயிலுக்காக குறைந்த அளவு தூரம் செல்லும் சில ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தினசரி வேலைக்கு செல்லும் பயணிகள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இது தொடர்பாக கேரள மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பாலக்காடு ரயில்வே டிவிஷனல் மேனேஜர், பயணிகளின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு தலைவரும் ஜுடிசியல் உறுப்பினருமான கே பைஜூ நாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வந்தே பாரத் ரயில் இடையூறு இன்றி இயங்குவதற்காக பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோட்டில் சுமார் 1.30 மணி நேரம் கூடுதலாக நிறுத்தப்படும் என ரயில்வே அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. அதேபோல், கன்னூர்- கோழிக்கோடு பயணிகள் ரயில் பல ரயில் நிலையங்களில் வந்தே பாரத் இடையூறு இன்றி செல்வதற்காக நிறுத்தப்படுகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications