ராத்திரி நேரத்தில்.. 25 வயசு பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுங்கிய போலீஸ் ஜீப்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இரவெல்லாம் ஜீப்பில் பெண்ணுடன் சுற்றி சுற்றி வந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்: ராத்திரி நேரத்தில் போலீஸ் ஜீப்பில் ஒரு பெண்ணுடன் காட்டுப்பகுதியில் விடிய விடிய இன்ஸ்பெக்டர் "பேசி" கொண்டிருந்தாராம்.. இதையடுத்து அவரை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.. கேரளாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது கவிகோத்தகிரி என்ற போலீஸ் ஸ்டேஷன்.. இங்கு சினு என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செரின் என்பவர் ஜீப் டிரைவராக இருக்கிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று நைட் 11 மணி இருக்கும்.. இன்ஸ்பெக்டர் சினு, அந்த ஜீப்பை எடுத்து கொண்டு சுற்ற ஆரம்பித்தார்.. அந்த ஜீப்பில் 25 வயசு பொண்ணு இருந்தாராம்.. நைட் நேரத்திலும் செரின்தான் ஜீப்பை ஓட்டியிருக்கிறார்.
அவர் ஜீப் ஓட்ட, பின்னாடி இன்ஸ்பெக்டரும் அந்த பெண்ணும் இருந்திருக்கிறார்கள். ராத்திரி எல்லாம் கண்ணூர் பகுதி முழுக்க அந்த ஜீப் சுற்றி சுற்றி வந்திருக்கிறது.. பிறகு திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு ஜீப் சென்றதாம்.. அந்த இடத்திலேயே ரொம்ப நேரமாக ஜீப் நின்றிருக்கிறது.
அந்த பக்கமாக வந்த ஒருவர், காட்டுக்குள் எதற்காக போலீஸ் ஜீப் நிற்கிறது என்று கவனித்துள்ளார்.. அப்போதுதான் உள்ளே ஒரு சாரும், மேடமும் இருப்பது தெரிந்திருக்கிறது.. உடனே செல்போனை எடுத்தார்.. வீடியோவை ஆன் செய்தார்.. அப்படியே படம் எடுத்து கண்ணூர் துணை எஸ்பி பிரேம்ராஜனுக்கு அனுப்பியும் வைத்துவிட்டார்.
இதை பார்த்து அதிர்ந்த அந்த அதிகாரி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.. அப்போது, காட்டு பகுதியில் பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததை இன்ஸ்பெக்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சினுவை அதிரடியாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications