எதிர்பார்த்ததைவிட பெரிய திருட்டு.. சபரிமலை தங்கம் திருட்டு பின்னணியில் மாபியா.. எஸ்ஐடி பகீர் தகவல்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 6 வருங்களாகியும் திருடப்பட்ட தங்கத்தை முழுமையாக மீட்க முடியவில்லை. இதனிடையே வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு கேரளா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கேரளாவில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு மட்டுமல்லாமல், அங்கு பல்வேறு காலகட்டத்தில் தங்கம் திருடப்பட்டதும், இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. தற்போது சபரிமலைக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில், அங்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்க கவனம் திருட்டு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை தங்கம் திருட்டு
சபரிமலை சன்னிதானம் அருகே துவார பாலகர் சிலையில் இருந்த தங்க கவசம், பராமரிப்பு பணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது நடந்த திருட்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறார்கள். தேவஸ்தானம் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் புள்ளி, திரை பிரபலங்கள் என்று பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது அந்த விசாரணையில் தகவல்கள் வெளியாகி கேரளா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கேரளா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு ஷாக் தகவல்
சபரிமலை தங்கம் திருட்டு குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கூறுகையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு தங்க அலங்கார பலகைகள், ராசி சின்னங்கள், கதவின் மேல் பகுதி உள்ளிட்ட தங்க கவசங்களை, தாமிர கவசங்கள் என்று போலியாக கணக்கு காண்பித்து எடுத்துள்ளனர். நகையை திருப்பியும் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு கொடுக்காமல், தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் முன்னாள் தலைவர் பத்மகுமார், ஆணையர் வாசு, சபரிமலை செயல் அலுவலர் சுதீஷ்குமார், நிர்வாக அதிகாரி முரரி பாபு, சென்னையைச் சேர்ந்த பங்கஜ் பந்தாரி, ரோடம் பன்து ரங்கையா மற்றும் திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்பார்த்ததை விட பெரிய சம்பவம்
இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்பட்டு, தெளிவாக திட்டமிட்டு இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலைக்கு சொந்தமான பல நகைகள், பல்வேறு காலகட்டங்களில் திருடப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட திருட்டு பெரியளவுக்கு நடந்துள்ளது. இப்போது வரை நகைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்தால் தான் வழக்கு அடுத்தகட்டத்திற்கு செல்லும்." என்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications