காதலனை விஷம் வைத்து கொன்ற கிரீஷ்மா! மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு! ஏற்றது ஐகோர்ட்
திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கில், அவரது காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனைக்கு எதிராக கிரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு கேரள அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜுக்கும், களியக்காவிளை சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஷாரோன் ராஜ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்கள் மகனுக்கு அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது.
நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். முதலில் அதற்கு கிரீஷ்மா முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொலை செய்ய கிரீஷ்மா தீர்மானித்தார்.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த அவருடன் சுற்றிய போட்டோக்கள், வீடியோக்களை மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வருடங்களாக நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். தாய் சிந்து இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கிரீஷ்மாவுக்கு எதிராக கொலை, விஷம் கொடுத்தது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து இருவருக்குமான தண்டனை கடந்த 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார்.
"ஷாரோன் ராஜை மட்டுமல்ல, காதலின் உன்னதமான உணர்வையும் சேர்த்தே கிரீஷ்மா கொலை செய்துள்ளார். ஷாரோன் ராஜை, க்ரீஷ்மா காதல் என்ற பெயரில் நம்ப வைத்து வீட்டிற்கு அழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். ஒருமுறை அல்ல, பலமுறை ஷாரோனை கொலை செய்ய முயன்று உள்ளார். எனவே இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு படுகொலை.
கிரீஷ்மா ஷரோனுக்கு விஷம் கொடுத்தது, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடந்தது. ஷாரோன் தன்னை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியதாக் கிரீஷ்மா சொன்னதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஷாரோனை கொலை செய்துவிட்டு அதனை மறைக்க பல தந்திரங்களையும் கையாண்டுள்ளார் கிரீஷ்மா.
காதலுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ள கிரீஷ்மாவுக்கு தண்டனை அளிப்பதில் இருந்து, அவரின் வயதையோ, அவருக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதையோ கருத்தில் கொள்ள முடியாது. எனவே கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் கிரீஷ்மா மேல்முறையீடு செய்துள்ளார். இதனை விசாரணைக்கு ஏற்றது கேரளா ஐகோர்ட். மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கிரீஷ்மாவின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications