சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு! 40 பேர் இருந்தாலே போதும்.. நினைத்த ஊர்களுக்கு போகலாம்!
திருவனந்தபுரம்: மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பனை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நிலக்கல், திரிவேணி, பம்பா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொலைதூர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளை கேரளா அரசு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி செல்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கேரளா அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சபரிமலையில் வாழும் ஐயப்பனை காண ஆண்டுதோறும் பக்தர்கள் சென்றாலும், கார்த்திகை- மார்கழி மாதங்களில் கூட்டம் லட்சக்கணக்கில் திரளும்.. கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.

தொடர்ந்து 41 நாட்கள் இந்த பூஜையானது கடைபிடிக்கப்பட்டு சபரிமலையில் தோன்றும் மகரஜோதியை காண்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கியது.
இதனையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர். எரிமேலியில் பேட்டை துள்ளி பம்பையில் புனித நீராடி மலை ஏறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை சிறு வழிப் பாதையிலும், எருமேலையிலிருந்து சன்னிதானம் வரை பெரு வழிப் பாதையிலும் பக்தர்கள் காடு மேடுகளை கடந்து ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர்.
தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக நிலக்கல்லில் பார்க்கிங் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்வதற்காக பம்பை வருகின்றனர். மேலும் தனியார் வாகனங்கள் வாடகை வாகனங்களில் பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசு பேருந்து சேவையை பயன்படுத்தி சபரிமலைக்கு வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பம்பையிலேயே ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தரிசனம் முடிந்து வெளியூர் செல்லும் பக்தர்களுக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்போதைய சூழலில் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து சபரிமலைக்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கேரளா அரசு பேருந்துகளும் பம்பையில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு இயக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது முதற்கட்டமாக செங்கனூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், பந்தனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கும், தமிழகத்தில் கம்பம், தேனி, பழனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக பம்பை பேருந்து நிலையத்தில் இருநூறு பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்சம் 40 பக்தர்கள் இருந்தாலே அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திரிவேணியிலிருந்து மூன்று பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன. இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பக்தர்கள் வசதிக்காக மூன்று இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறை-9446592999, நிலக்கல்-9188526703, திரிவேணி-9497024092, பம்பா-9447577119 என்ற எண்களில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம்.
-
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு!












Click it and Unblock the Notifications