திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு ஸ்டாலின் என கலைஞர் பெயர் சூட்ட காரணம் இதுதான்! சிபிஐ மாநாட்டில் மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய
மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தனக்கு கலைஞர் ஸ்டாலின் என பெயர் சூட்ட காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நேற்று கட்சியின் கொடிஏஎற்றத்துடன் மிகப் பிரம்மாண்டத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கி 4 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இன்றைய நிகழ்வுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு 'கூட்டாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,"பொதுவாக தமிழ்நாட்டில் தான் கூட்டணிக் கட்சியின் மாநாடுகள் நடந்தால் என்னை அழைப்பார்கள். ஆனால் சமீப காலமாக கேரளாவில் நடைபெறும் கூட்டணிக் கட்சி மாநாடுகளிலும் என்னை அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளீர்கள். நானும் தமிழ்நாட்டில் தட்டாமல் கலந்து கொள்வதைப் போல இங்கு நடந்தாலும் பங்கேற்கின்றேன்.

ஒன்றாக வேண்டும்

ஒன்றாக வேண்டும்

மாநில எல்லைகள் நம்மைப் பிரித்தாலும் - நாம் இந்தியா முழுமைக்கும் உருவாக்க நினைக்கும் கூட்டாட்சியானது வெல்ல வேண்டுமானால் அனைவரும் எல்லைகளை மறந்து ஒன்றாக வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் நீங்கள் என்னை அழைப்பதும். நான் இங்கே வருவதும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநாடு கண்ணூரில் நடந்த போது நான் வந்திருந்தேன். அப்போது சொன்னேன். என் பெயர் ஸ்டாலின். அதனால் நீங்கள் என்னை அழைக்காமல் இருக்க முடியாது என்று சொன்னேன்.

 நெருங்கிய தொடர்பு

நெருங்கிய தொடர்பு

திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குமான நட்பு என்பது இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்திலேயே உருவான நட்பாகும். சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் - சோவியத் நாட்டுக்குச் சென்று விட்டு வந்த பிறகு தான் தனது சமதர்மக் கொள்கையை வடிவமைத்தார்கள். தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தின் மாபெரும் தூண்களாக போற்றப்படும் ம.வெ.சிங்காரவேலரும் - ஜீவா அவர்களும் சுயமரியாதை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.

ஸ்டாலின் பெயர் ஏன்?

ஸ்டாலின் பெயர் ஏன்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்தார்கள். திராவிட இயக்கம் உருவாகவில்லை என்றால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அது மனப்பூர்வமாகச் சொன்னது என்பதன் அடையாளம் தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியது ஆகும். நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக்காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல - அகில இந்திய அளவில் கூட்டணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.

English summary
Tamil Nadu Chief Minister Stalin, who addressed the All India Conference of the Communist Party of India in Thiruvananthapuram, Kerala, spoke openly about the reason why he was named by kalaignar as Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X