வேட்டையன் படம் வெளியானதும் சுடச்சுட இணையத்தில் வெளியீடு! தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் இருவர் கைது
கொச்சி: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த கொச்சியில் வேட்டையன் திரைப்படத்தை இருவர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து அதை வெளியிட்டதாக தமிழ் ராக்கர்ஸை சேர்ந்த இரு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து உடனே அவர்களுடைய இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுகிறார்கள்.

இதனால் மக்கள் தியேட்டருக்கு போகாமல் தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்ப்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.
ஆனால் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வரும் படங்களை தடை செய்யவம் முடியாமல், அந்த நிர்வாகிகளை கண்டுபிடிக்கவும் முடியாமல் போலீஸாரும் திரைத்துறையினரும் திணறி வந்தனர். எந்த படங்கள் புதிதாக வந்தாலும் அதை இணையதளத்தில் ஒளிபரப்ப தடை கோரி படத்தயாரிப்பாளர்கள் தரப்பு இணையதளத்தை அணுகும்.
அவ்வாறு அணுகினாலும் படம் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் இணையதளத்தில் படம் வந்துவிடுகிறது. சில இடங்களில் தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகள் வீடியோ எடுப்பதை பார்த்து ரசிகர்களே போலீஸில் பிடித்து கொடுத்த சம்பவம் கூட நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் வேட்டையன் படம் வெளியானது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் நடித்த இந்த படத்தை லைகா தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் படம் வெளியான சில நேரங்களில் வேட்டையன் படம் இணையத்தில் வெளியானது. அஜயண்டே ரண்டம் மோஷனம் என்ற மலையாள படத்தின் சட்டத்திற்கு புறம்பான காப்பியையும் டெலிகிராமில் ரிலீஸ் செய்ததாக தமிழ் ராக்கர்ஸ் நிறுவன நிர்வாகிகள் இருவரை கொச்சி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார், குமரேசன். இவரையும் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். அது போல் குருவாயூர் அம்பலநடையில் என்ற மலையாள படத்தையும் இவர்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications