கேரளாவின் இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணோடு மண்ணாக புதைந்த வீடு! மீட்பு பணிகள் தீவிரம்
திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி தேசிய நெடுஞ்சாலையில் வீடுகள் இருக்கும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் இன்று அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் வீட்டில் வசித்தவர்கள் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

நிலச்சரிவில் மக்கள் சிலர் சிக்கிக் கொண்ட தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வயനாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. தென்மேறு பருவமழை தீவிரம் அடைந்து இருந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மலைப்பகுதிகளில் இருந்த ரிசார்ட்கள், வீடுகள் மண்ணோடு மண்ணாக அடிது செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் 318 பேர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய தாக்கமே கேரள மக்கள் மனதில் ஆறாத ரணமாக உள்ள நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் நிலச்சரிவு எற்பட்டு இருக்கும் தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications