உயிருடன் இருக்கும்போதே மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் 9 வயது சிறுமி பலி! இது எந்தளவுக்கு ஆபத்து?
திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் சிறுமி ஒருவருக்கு மிக மோசமான ஒரு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தச் சிறுமிக்கு மூளையை தின்னும் அரிய வகை அமீபா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் கூட அவரை காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நோய் எந்தளவுக்கு ஆபத்தானது.. இதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் திடீர் திடீரென நாம் யோசித்துக் கூட பார்க்காத பல வைரஸ் அல்லது நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை மிக மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் தான் இதுபோன்ற நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. மீண்டும் அப்படியொரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. அங்கு மோசமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி கேரளாவில் உயிரிழந்துள்ளார்.

கேரளா அமீபா
கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில நாட்களாக 9 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், அவரை காப்பாற்ற முடியவில்லை. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது.. இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்தச் சிறுமி உயிரிழந்தார்.
உயிரிழப்பு
தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு நடத்தப்பட்ட சோதனையில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.. அசுத்தமான நீரில் இருக்கும் அமீபாவால் ஏற்படும் ஒரு அரிய வகை மூளைத் தொற்று இதுவாகும். இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆகஸ்ட் 13ஆம் தேதி சிறுமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமானதால் ஆகஸ்ட் 14ஆம் தேதி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனில்லாமல் அன்று மாலையே அவர் உயிரிழந்தார்" என்றார்.
இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் சிறுமியின் மரணத்திற்குக் காரணத்தைக் கண்டறியச் சோதனை நடத்தப்பட்டது. அதில் அமீபிக் மூளை அழற்சியே சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
தாமரச்சேரியைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு இந்தத் தொற்று எங்கிருந்து ஏற்பட்டது என்பதைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் மாதிரிகளைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. எந்த நீர்நிலை என்பது உறுதி செய்யப்பட்டவுடன், அதில் கடந்த சில நாட்களில் குளித்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கேரள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதென்ன மூளையை உண்ணும் அமீபா
கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த அரிய வகை மூளைத் தொற்று காரணமாக ஏற்படும் நான்காவது நிகழ்வு இதுவாகும். அமீபிக் மூளை அழற்சி என்பது நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் இருந்து பரவும் ஒரு ஆபத்தான தொற்றுநோயாகும். இது Naegleria fowleri என்ற அமீபாவால் ஏற்படுகிறது. அசுத்தமான ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்ற நீரில் இவை வேகமாகலும் வளரும். இந்த நீரில் நீச்சலடிக்கும்போது, மூக்கு வழியாக இவை உடலில் நுழைகிறது. மூக்கு வழியாக நாசிப் பத்திகளுக்குள் நுழையும் இது நேரடியாக மூளையைத் தாக்கும்.
அமீபா உடலுக்கு நுழைந்த சில நாட்களில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். சில நேரம் வலி, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகப்படுத்தும் hallucinations, கோமா கூட ஏற்படும். இந்த அமீபா உடலில் புகுந்தால் உயிர் பிழைப்பது கடினம். இந்த வகை அமீபா தாக்கினால் கிட்டத்தட்ட 97% நோயாளிகள் உயிரிழந்துவிடுவார்கள். அசுத்தமான நீரில் குளிப்பதைத் தவிர்த்தாலே இந்த வகைப் பாதிப்பில் இருந்து நாம் தப்பிவிடலாம்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சால்மன் மீன் வாங்கறீங்களா? மூளைக்கு ஒமேகா 3 பவர் உயருமே.. இந்த ஆரஞ்சு கலர் மீனால் உடல் எடை குறையுமா -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications